தலைப்பு-அரசியல் ஆத்திசூடி :thalaippu_arasiyal_aachichuudi_therthal_thiru

அரசியல் ஆத்திசூடி அல்லது தேர்தல் ஆத்திசூடி

 1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்!
 2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
 3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.
 4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்!
 5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்
 6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்!
 7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்
 8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
 9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்!
 10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்!

11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்!

 1. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்!
 2. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்!
 3. கயவருக்கு வாக்களிக்காதீர்!
 4. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்!
 5. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்!
 6. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்!
 7. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்!
 8. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்!
 9. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்!
 10. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் !
 11. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் !
 12. கொடுங்கோலருக்கு வாக்களிக்காதீர் !
 13. கோழைக்கு வாக்களிக்காதீர் !
 14. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் !
 15. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் !
 16. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் !
 17. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் !
 18. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் !
 19. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் !
 20. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்!
 21. சூதருக்கு வாக்களிக்காதீர்!
 22. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் !
 23. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்!
 24. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் !
 25. சொல்தவறுவோர்க்கு வாக்களிக்காதீர்!
 26. சோம்பேறிகளுக்கு வாக்களிக்காதீர் !
 27. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு வாக்களிக்காதீர்!
  39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம் ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்!
  40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு வாக்களிக்காதீர்!
 28. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 29. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
 30. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்!
 31. தமிழ்ப்பகைவருக்கு வாக்களிக்காதீர் !
 32. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் !
 33. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் !
 34. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் !
 35. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
 36. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் !

50.தெளிவில்லாதவருக்கு வாக்களிக்காதீர் !

 1. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் !
 2. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
 3. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் !
 4. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் !
 5. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
 6. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் !
 7. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் !
 8. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் !
 9. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் !
 10. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அறியாதவருக்கு வாக்களிக்காதீர் !
 11. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்!
 12. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
 13. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 14. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்!
 15. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) வாக்களிக்காதீர்!
 16. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்!
 17. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 18. பாடுபடாதவருக்கு வாக்களிக்காதீர்!
 19. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்!
 20. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 21. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 22. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்!
 23. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
 24. பேராசையாளர்க்கு வாக்களிக்காதீர்!
 25. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்!
 26. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
 27. போக்கிலிகளுக்கு வாக்களிக்காதீர்!
 28. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 29. மாண்பற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 30. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்!
 31. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்!
 32. முரடர்க்கு வாக்களிக்காதீர்!
 33. மூடர்க்கு வாக்களிக்காதீர்!
 34. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 35. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 36. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்!
 37. மொழிக்கொலைஞர்க்கு வாக்களிக்காதீர்!
 38. மோசடியாளர்க்கு வாக்களிக்காதீர்!
 39. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்!
 40. வஞ்சகர்க்கு வாக்களிக்காதீர்!
 41. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 42. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்!
 43. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
 44. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்!
 45. வேடதாரிகளுக்கு வாக்களிக்காதீர்!
 46. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்!
 47. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

98     ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்!

 1. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்!
 2. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்!
 3. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 4. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 5. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!.
 6. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
 7. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்!
 8. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்!
 9. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்!
 10. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
 11. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 12. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
 13. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்! (கிளப்பவர் – எழுச்சியுடன் உரைப்பவர்)
 14. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
 15. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்! (குயிற்றுநர் – மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)
 16. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 17. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்!
 18. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்!
 19. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 20. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
 21. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 22. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்!
 23. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
 24. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
 25. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்! (பரவுநர் – துதிப்பவர்)
 26. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
 27. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 28. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
 29. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
 30. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்!
 31. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
 32. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்
 33. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்!
 34. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்!
 35. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
 36. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 37. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
 38. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
 39. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்!
 40. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
 41. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு வாக்களிப்பீர்!
 42. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
 43. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
 44. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்!
 45. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
 46. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
 47. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
 48. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்!
 49. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
 50. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்!
 51. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
 52. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 53. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்!
 54. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்!
 55. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்!
 56. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்!
 57. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்!
 58. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்!
 59. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
 60. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
 61. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
 62. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
 63. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
 64. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
 65. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
 66. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்!
 67. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
 68. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 69. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்!
 70. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்!
 71. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
 72. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்!
 73. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

photo_Ilakkuvanar_Thiruvalluvan