பிரபஞ்சன் காலமானார்

எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார்.   எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று  புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்  

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கசா(கஜா) புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான். இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு…

அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன்,  தினமணி

அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்றால் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி ஒருவர் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (NET அல்லது SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. நவம்பர் 2018…

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! –  தி.வே.விசயலட்சுமி

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி…

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது. பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது.  அரசு மழலைப்பள்ளிகள்…

சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்

சென்னையில் காப்பியக் கருத்தரங்கம் து.கோ.வைணவக் கல்லூரி – தினமணி இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்குக்கு கட்டுரைகள் வரவேற்பு சென்னை அரும்பாக்கம் து.கோ..வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து நடத்தவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வரும் தை 10,2050 / சனவரி மாதம் 24-ஆம் நாள் ‘தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு‘ என்ற தலைப்பில் து.கோ. வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து தேசியக் கருத்தரங்கம் நடத்தவுள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் இக்கருத்தரங்கில் பங்கு பெறலாம்….

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்: படைப்புகளை அனுப்ப ஆனி 02 / சூன் 16 கடைசி நாள் தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆனி 15- ஆனி 24 / சூன் 29 முதல் சூலை 8 வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்புக்கரி (லிக்னைட்டு)…

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!  – தங்க. சங்கரபாண்டியன்

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!      ‘கல்விப் பெருவள்ளல்’, ‘புதுக்கோட்டை அண்ணல்’ என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், ஐயாக்கண்ணு – மாணிக்கத்தம்மாள் இணையருக்கு ஐப்பசி 07, 1929   – 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு ‘கல்வி வளர்ச்சிக் கழகம்‘ ஒன்றைத் தொடங்கினார்.  …

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!  ‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள். கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம்,…

1 2 4