attai_velaalarnakarikam

  இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத்தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர்புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப்படியோ செய்து வைப்பர்.

– மறைமலை அடிகள்: வேளாளர் நாகரிகம்:பக்கம் 21