Thamizh_Nedungkanakku01

ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு

தம் மொழியை அமைத்துக் கொண்டனர்

   ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழியினங்களுக்குக் கிரேக்க, இலத்தீன் எனப் பெயர்கள் இருப்பதைப் போல, இந்தியாவிற்கு வந்த ஆரிய மொழிக்கு ஏதேனும் பெயர் உண்டு என்பரேல் அது சரி, ஒத்துக் கொள்வோம். சமற்கிருதம் என்னும் பெயர் எப்பொழுது வந்தது? ஆரியர் இந்தியாவிற்கு வந்து தமிழிலுள்ள உயிரையும் மெய்யையும் தம் மொழியில் வைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற உயிர் மெய்யெழுத்தையும் அமைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற மொழிகளையும் ஆராய்ச்சியால் செம்மை செய்து அமைத்துக் கொண்ட தமது மொழிக்குச் “சமற்கிருதம்’ எனப் பெயர் வைத்தனர்.

  சமற்கிருதம் செம்மைச் செய்யப்பெற்ற மொழி. இச்சமற்கிருத மொழியில், இயற்றப் பெற்ற கலைகள் எழுதின ஏடுகளை ஒரு கட்டாகக் கட்டி வைத்தனர். அவ்வேடுகளைக் “கிரந்தம்’ என்றனர். கிரந்தம்: கட்டப்படுவது.

– பண்டிதர் அ.கி.நாயுடு : தொல்காப்பியர் கண்ட தமிழ்ச் சமுதாயம்