இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்
மொழிவேற்றுமையால் மனவேற்றுமை விளையும். மொழி ஒன்றுபட்டால் மக்களின்மனமும் ஒன்றுபடும் என்பது மற்றொரு காரணம். இதுவும் அனுபவத்திற்கு முரண்பட்டபொய்யுரை.
சாதிபற்றியும் சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்குகளால் கொலை, பழி பாதகங்களும் பகைமையும் ஒரு மொழிபயில்வோருக்குள்ளேயே நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களும் வேற்றுமைஉணர்ச்சிகளை வளர்த்து இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும் கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாத மந்திரி இந்திமொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும்ஏமாற்றமும் ஆகும்.
– தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்: இந்திமொழி எதிர்ப்பு:
தமிழ்ப்பொழில் (அக்டோபர் 1937) தரவு:
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும்: பக்கம். 126
Leave a Reply