இவை தொடர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
இவை தொடர வேண்டா!
கடந்த ஆட்சிகளில் காணப்பெறும் நிறைகளைப் பின்பற்றியும் குறைகளைக் களைந்தும் புதிய அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பின்வரும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை.
- ‘நான்’ என்னும் அகந்தை எண்ணம்.
- எல்லாமே முதல்வரின் செயல்பாடு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கல்.
- காலில் விழும் ஒழுகலாறு.
- ஈழத்தமிழர்களை உரிமையுடன் வாழ விடாமை.
- அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சுதல்.
- ஊழற் செயல்பாடுகளுக்கு முதன்மை அளித்தல்.
7.அமைச்சர்களே முதலமைச்சரைப் பார்க்க இயலாமை.
- முதல்வர் ஊடகங்களிலிருந்து விலகி நிற்றல்.
- அமைச்சர்கள் தங்கள் துறை குறித்துக் கூறவும் வாய்ப்பூட்டு போடுதல்.
10.கோப்புகளில் விரைந்து முடிவெடுக்காமை.
- வழக்கத்திற்கு மாறான கால அளவில் சிறைவாசிகளை அடைத்து வைத்தல்.
- ஒழிவாக/காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமை.
- ஒத்துப்போகிறவர்களுக்குப்பதவி உயர்வில் அல்லது பதவி அமர்வில் முன்னுரிமை அளித்தல்.
- ஆங்கில வழிக்கல்வியைத் திணித்தல்.
15.அவதூறு வழக்குகள் மூலம் கருத்துரிமை பறித்தல்.
16.வேலைவாய்ப்புகளைப் பெருக்காமை.
- தொழில்வாய்ப்புகளை மிகுக்காமை.
18.போராட்டங்களை ஒடுக்குதல்.
- ஈழ ஆதரவாளர்களை அடக்குதல்.
- மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களைச் செயற்படுத்தல்.
- தமிழ்க்கொலைகளை ஊக்குவித்தல்.
- நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்காமை.
- தனியார் கல்வி நிலையங்களை ஊக்கப்படுத்தல்.
- மதுவணிகம்.
- கருணாநிதி எதிர்ப்பு அரசியல்.
- அறிஞர்களை மதிக்காமை.
- எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்தல்.
- பிற கட்சிகளிடம் நல்லிணக்கம் பேணாமை.
- மக்கள் சார்பாளர்களை விலைக்கு வாங்குதல்.
- மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுத்தல்.
- முதன்மைப் பதவிகளில் தமிழரல்லாதவரை அமர்த்துதல்.
- தமிழை அன்றாடப் பயன்பாட்டு நிலையிலிருந்து அகற்றுதல்.
- தமிழ்வழிபாடு நடைபெறும் ஊர்க்கோயில்களில் சமற்கிருத வழிபாட்டைத் திணித்தல்.
- தமிழர்க்கான கோயில்களில் தமிழை அகற்றுதல்.
- தமிழ்மொழிக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் நீக்குதல்.
- தமிழறியாமலேயே தமிழ்நாட்டில் வாழச் செய்தல்.
- தேவையற்ற அடை மொழிகளில் அரசியலாளர்களையும் கலைஞர்களையும் அழைத்தல்.
- சாதிக்கட்சிகளை ஊக்கப்படுத்தல்.
- சாதிக் கொலைகளைத் தடுக்காமை
இவையாவும் இல்லாமல் இருந்தாலே
இவை தொடர்பான குற்றங்களும் இல்லாமல் ஒழியும்; நல்லாட்சி நிலவும்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள்1025)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply