தலைப்பு.நெறி தவறாதீர் ; thalaippu_neri-thavaraatheer

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!

    2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் –  தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

 ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்கள் என்று தமிழர் தாயகம் பச்சையான  பண்பாட்டுக் கருவறுப்புக்குள் சிக்க வைக்கப்பட்டுச் சின்னாபின்னமாக்கப்பட்டு வருகின்றது. 

  தமிழர் பரம்பரை, பண்பாட்டுத்தொடர்ச்சியான கூட்டுக்குடும்ப வாழ்க்கை – பழக்க வழக்க முறைமைகள் சிதைவடைய போரும் அதைத்தொடர்ந்த தடையற்ற – கட்டுப்பாடற்ற இற்றைத்துவ(நவீனத்துவ) ஊடுருவல்களும் ஒரு காரணமாகவிருந்தாலும் கூட,

இந்த மாபெரும் பண்பாட்டுச்சிதைப்பில்,

சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கும் – அதிகார வருக்கத்தினருக்கும் உள்ள வகிபாகம்தான் என்ன? தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ள பங்களிப்புதான் என்ன? என்பன தொடர்பில் செய்தி மி. தொ.கா.( newsetv) குடிமைக் குமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது.

  தமது ஆட்சி நிலத்தில், தமக்கே உரித்தான மொழி, கலை,  பண்பாடு,  பரம்பரையம், மரபுரிமைகளைப் பாதுகாத்து உலகக் குமுகங்களுக்கு முன்பாக அடையாளம் பெற்ற தமிழ் இனம், தற்காலத்தில் நெறிகெட்டுப் போகும் நடத்தைப் பிறழ்வுகளால் பிற இனங்களுக்கு முன்னே கூனிக்குறுகி அவமானப்பட்டு நிற்க, சிறீலங்கா  அரசு படைகளால் ‘தமிழ் இளையோர்கள் ஒரு கருவியாக’ப் பாவிக்கப்படும் மோசமான நிலைமைகள்,

  அறிந்தோ அறியாமலோ இந்த மாபெரும் ஊழிச்சுழிக்குள் வீழ்ந்து அதிலிருந்து விலகி விடுபட்டுப் பொது அமைதி வாழ்க்கைக்குள் வாழ்வதற்குத் திரும்பும் அத்தகைய இளையோர்கள் மீதும், தமிழ்க் குடிமைக் குமுக அரசியல் வெளியை எப்போதும் ஒரு சூடான இயங்குதளமாக – பரபரப்பான பேசுபொருளாக வைத்திருக்க துடிக்கும் குடிமைக் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மீதும், அதே அரச பயங்கரவாதம் ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எனும் லத்தியை பிரயோகிக்கும் ஆபத்தான நிலைமைகள் தொடர்பிலும்,

  தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் உன்னத இலட்சியங்களுக்காகப் பல ஆயிரம் இளையோர்கள் உயிர்க்கொடை செய்த மரபிலிருந்து குறிப்பிட்டளவு இளையோர்கள் சிலர் சமக்காலத்தில் நெறி தவறிச் செல்லும் போக்குகளைக் கட்டுப்படுத்த தமிழ் அரசியல் தலைமைகளிடம் கொள்கையும் – தெளிவும் உடைய வேலைத்திட்டங்கள் இல்லாத சிந்தனை வறட்சி தொடர்பிலும்,

  கைதுகளுக்குப் பின்னால் உள்ள நுணுக்கமான அரசியல் தொடர்பிலும் ஆழமான கருத்துகளை இந்தக் காணுரையில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கேளுங்கள்! கருத்துகளைப் பகிருங்கள்!

அறி – தெளி – துணி -இரௌத்திரம் பழகு’

 செய்தி மி.தொ.கா.(newsetv) செய்திக்குழுமம்

 

மாபெரும் தமிழினப்பண்பாட்டு அழிப்பில் – திணிப்பில்’

சிறீலங்கா அரசு பயங்கரவாதம்!  காணுரை