– இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஈழத்தில், போராளிகள், சிறார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர்கள், பிற உயிரினங்கள் என்ற வேறுபாடின்றி, பன்னூறாயிரவர் கொல்லப்பட்டனர்!  பல நாட்டுப் படை உதவியுடன், எரிகுண்டு, கொத்துக்குண்டு, ஏவுகணை, எனப்பல்வகைப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தி அங்கே வஞ்சகத்தால் மண்ணின் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்டனர்!  5 ஆண்டுகள் ஆனாலும் நம் உள்ளம் கனன்றுகொண்டுதான் உள்ளது. என்ற போதும் கொலையாளிகள் தண்டனையின்றி அறவாணர்கள்போல் உலா வருகின்றனர். இப்பொழுதுதான் வாக்குச் சீட்டு ஆயுதத்தின்  மூலம் கொலையாளிகளையும் கூட்டாளிகளையும் துரத்தியடித்துள்ளோம்! 1,76,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்களை அழித்தபின்பும் இருக்கின்ற மக்களை  வதைத்தும், சிறைப்படுத்தியும் கற்பழித்தும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தியும் கட்டாயப் பரத்தமையில் தள்ளியும் அவர்களின் உடைமைகளைப் பறித்தும், நிலத்தைக் கவர்ந்தும் சொல்லொணாத் துயரங்களை இழைத்துக் கொண்டிருக்கின்றது சிங்களக் கொடுங்கோலரசு. இந்த நேரத்தில் ஈழம் தொடர்பான  கருத்தூட்டங்களை மீள நினைப்பது நம் நீறுபூத்த உணர்வுக்கனல்களுக்குக் காற்று வீசுவதாய் அமையும் என எண்ணுகிறேன். எனவே, கடந்த 5 ஆண்டுகளாக, ஈழம் பற்றிய செய்திகளில்- பெரும்பான்மை தினமணி, சிறுபான்மை தினமலர், மாலைமலர் முதலான பிற இதழ்களில் வந்த செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் – நான் பதிந்த கருத்தூட்டங்களைத் தொகுத்து அளிக்கின்றேன்.

[ஒவ்வொரு துளியிலும்… தினமணி தலையங்கம்]
Dinamani_Logo01

1.} விதைக்கப்பட்ட நீங்கள் மீண்டு எழுவீர்கள்!

  தினமணியின் ஒவ்வொரு சொல்லும் வரலாற்றில் உண்மையைப் பதிவு செய்யும் உளியாகும்! திட்டமிட்ட tomb-kallarai01இனப்படுகொலையில் ஆரிய அரசுகள்தான் செயல்படுத்தின என்றால் தமிழினம் எனக் கூறிக் கொள்பவர்களும் இதற்குத் துணை போன அவலத்தை என்னென்பது? வரலாற்றில் அழியாத களங்கத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது? ஊர்திகளில் குண்டு வீசி தாக்கிய போது எதிர்த் தாக்குதலே செய்யவில்லை எனச் சிங்கள அரசு கூறும் பொழுது மாவீரர்கள் தப்பி ஓடியதாகப் பழி சுமத்துவதை தினமணியாவது சுட்டிக் காட்டுகின்றதே! மாவீரர்களே! விதைக்கப்பட்ட நீங்கள் மீண்டு எழுவீர்கள்! காற்றில் கலந்த கனவு ஒருநாள் நனவாகும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் அவர்களே! மாவீரர் சுபாசு சந்திரபோசு போன்று நீங்கள் எங்கோ நலமாக ஆனால் வேதனையுடன் உள்ளீர்கள் என நம்புகிறோம்! தமிழ் ஈழம் வெல்க!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

5/19/2009 4:26:00 மு.ப.

2.] போரல்ல! இனப்படுகொலை!

  உண்மையான போர் எனில் ஈழத் தமிழர்கள் முழு விடுதலை அடைந்திருப்பார்கள். நெறிமுறையல்லா வழிprabaharan08 முறைகளையே சோனியா அரசும் சிங்கள அரசும் போர் முறை எனக் கொண்டதால் ஏற்பட்ட பேரவலம். விடுதலைப் புலிகள் எந்தச் சிங்களப் பகுதிக்கும் சென்று தாக்கியதில்லை. சிறை மீட்டல் போன்ற நேர்வுகளிலும் யார் உயிரையும் பறிக்காமல்தான் நிகழ்த்தியுள்ளனர். முதுகில் குத்தியவர்களைப் பழி வாங்கியிருக்கலாம். ஆனால், சிங்கள மக்கள் யாரையும் தாக்கி அழித்ததில்லை. தற்காப்பிற்குத்தான் ஆயுதம் ஏந்தினர். அவ்வாறிருக்க அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு அவர்களைச் சிலர் வசைபாடுவது முறையன்று. வீரமும் அறிவும் செறிந்த இனமாகவும் உலகிலேயே ஒழுக்கமுள்ள படையையும் உருவாக்கிய மாவீரர் இறப்புச் செய்தி பொய்யாகவே இருக்கட்டும்! எனினும் எண்ணற்ற மக்களும் அவர்களின் பாதுகாவலாக விளங்கிய தலைவர்களும் வீரர்களும் வெல்லப்படவில்லை; கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இப்பேரழி்வை ஏற்படுத்திய சோனியா அரசும் கூட்டாளிப் பித்தர்களும் இறைவனாலோ இயற்கையாலோ தண்டிக்கப்பட்டாலோ போன உயிர்கள் திரும்ப வருமா? உலகமே உன் மூத்த இனம் அழிக்கப்படுவது கண்டு நீ ஏன் பாராமுகமாக இருக்கின்றாய்! வீரர்கள அழிக்கப்பட அழிக்கப்பட அடுத்து அடுத்து எழுவார்கள்! விதைக்கப்பட்டவர்களின் வழிமுறையினர் வீறு கொண்டு எழுவார்கள்! விடுதலைப் புலிகளின் புகழ் ஓங்குக! ஈழத் தமிழர்கள் வாழ்க! ‌வெல்க தமிழ் ஈழம்!

வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

5/19/2009 9:01:00 மு.ப.

3.] மக்கள் இனம் அழிகின்றது!

  ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சிக்கான நிலப்பரப்பே இந்தியா என்பது. இத்தகைய இந்தியா என்னும் நிலப்பகுதியைச் சேர்ந்த இந்தியனாகப் பெருமைப்படும் அறிவாளிகளே! தமிழன் என்பது பிறப்பால் உருவான இனம்! தமிழனாக இருந்து தமிழர்கள் கூட்டம் கூட்டமாக அழிக்கப்படுவது கண்டு நெஞ்சு உருகாமல் மடிவது யாரோ எனக் களிப்படைகிறீர்களே! உங்கள் பிறப்பில் ஐயம் வரக்கூடிய இத்தகைய eezham-genocide34கருத்தைக் கைவிடுங்கள்! மேலும் இறப்பது எந்த இனமாக இருந்தாலும் மக்கள் இனம் அழிகின்றது என்றாவது வேதனை கொள்ளுங்கள்! சாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான டயர் என்பவனை இறந்தவர்களில் ஒருவரின் மகன் (வளர்ந்து இங்கிலாந்து சென்று படித்து)20 ஆண்டுகளுக்குப் பின் கொன்றதை – இல்லை இல்லை பழி தீர்த்ததை வீரமாகப் போற்றும் இந்திய நாட்டினர், ஆரியச் சாதிமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் ஆசு என்னும் ஆங்கிலேயரைக் கொன்ற வாஞ்சிநாதனை வீர வாஞ்சிநாதன் என்று கொண்டாடும் தமிழர்கள் நம்மவர் வீரத்தைக் கொச்சைப் படுத்தலாமா எனச் சிந்தியுங்கள்! மனம் திருந்துங்கள்! இல்லையேல் எக்கேடும் கெட்டுப் போங்கள்! பலர் உள்ளம் உடைந்து அழுது அரற்றிக் கொண்டிருக்கும் பொழுது அமைதியாக மட்டும் இருங்கள்! அது போதும்!

5/19/2009 9:03:00 மு.ப.

4.] காலம் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கும்!

  இந்நூற்றாண்டு சந்தித்த உண்மையான மாவீரர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.ltte-march01 புறநானூற்றுத் தமிழர்களை உருவாக்கிய அவர் தானும் ஒரு புறநானூற்று வீரராக வாழ்கிறார். அவரது மறைவு என்பது வழக்கமான இந்திய- சிங்களக் கூட்டுப் பொய்மையாக இருக்கட்டும்! மறைந்தும் வாழும் வீரப் போராளி முத்துக்குமார் குறிப்பிட்டது போன்று அவரைப் போன்ற தலைவர் தமிழகத்தில் இருந்தார் எனில் உலகெங்கும் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்திருப்பர்! உலக அமைதிக்கும் வளத்திற்கும் நாகரிகப் பண்பாடடு விழுமியங்களுக்கும் உழைத்திருப்பர்! அவ்வாறு இல்லாமல் போனது நம் தவக் குறைவே! ஈழப் போராளிகளின் புகழ் ஓங்குக! இதுவரை அவர்கள் செய்த ஈகங்களை – தியாகங்களை – மண்ணோடு மண்ணாக்கியவர்களும் ஒருநாள் மண்ணோடு மண்ணாகத்தான் போவார்கள்! அதற்குள் காலம் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கும்! தமிழ் ஈழம் வெல்க!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

5/19/2009 9:05:00 மு.ப.

5.] இறைவா! நீ இருக்கின்றாயா? இல்லையா?

அந்தோ பரிதாபம்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதாகக் கூறித் திட்டமிட்டு நாற்புறமும் சூழ இருந்து சோனியா – சிங்களக் கூட்டுப்படை தமிழர்களை அழித்திருக்கின்றதே! மரண வாக்கு மூலமாகச் cluster-bombs01செய்தியாளர் ஒருவர் செய்மதி வாயிலாகத் தெரிவித்த கருத்தினைக் கேட்ட பின்பாவது இங்குள்ள தமிழர்கள் திருந்த மாட்டார்களா? இவர்கள் திருந்தினால்தானே நாம் பிறரைத் திருத்த முடியும். இனி என்ன சொல்லி என்ன? மாபெரும் வீரமும் அறிவாற்றலும் கொண்ட இருபால் இளைஞர்களும் முதியோர்களும் குழந்தைகளும் சாகடிக்கப்பட்டனரே! இறைவா! நீ இருக்கின்றாயா? இல்லையா? நீ நின்று கொன்று பயன் என்ன? இனியேனும் ஈழத் தமிழர்கள் வாழ்வில் அமைதியை ஏற்படுத்து. குற்றுயிரும் குறையுயிருமாய் இருப்பவர்களை நலப்படுத்து!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

5/19/2009 9:06:00 மு.ப.

eezham03

(தொடரும்)

தரவு : thiru2050.blogspot.com