ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1311-1320)-இலக்குவனார் திருவள்ளுவன்
[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1301-1310) தொடர்ச்சி]
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
132. புலவி நுணுக்கம்
(தலைவனுக்கு மற்றொருத்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கற்பனையாய்க் கருதிக் காய்தல்)
231. பெண்கள் பலரால் பார்க்கப்படும் பரத்தனே, உன்னைத் தழுவேன். (1311)
232. வாழ்த்தை எதிர்நோக்கி ஊடும்போது தும்மினார். (1312)
233. மலரைச் சூடினாலும் யாருக்குக் காட்டச் சூடினாய் எனச் சினப்பாள். (1313)
234. எல்லாரையும் விடக் காதலிப்பதாகக் கூறினாலும் யார்,யாரை விட என ஊடுவாள். (1314)
235. இம்மைப்பிறவியில் பிரியேன் என்றால் வரும் பிறவியில் பிரிவேன் என எண்ணி அழுவாள். (1315)
236. உன்னை நினைத்தேன் என்றாள் நினைக்கும் வகையில் மறந்தது ஏன் எனத் தழுவலைத் தவிர்த்தாள்.(1316)
237. தும்மினால்,வாழ்த்தி, யார் நினைத்ததால் தும்மல் வந்தது என ஊடுவாள். (1317)
238. தும்மலை அடக்கினால், நினைக்கும் உம் ஆளை மறைக்கிறாயா என ஊடுவாள். (1318)
239. ஊடலைத் தணித்தால், பிறரிடமும் இப்படித்தான் நடந்துகொள்வாயா என ஊடுவாள். (1319)
240. அவள்அழகைப் பார்த்தால், யாருடன் ஒப்பிடுகிறாய் எனச் சினப்பாள். (1320)
Leave a Reply