ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1311-1320)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1301-1310) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 132. புலவி நுணுக்கம் (தலைவனுக்கு மற்றொருத்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கற்பனையாய்க் கருதிக் காய்தல்) 231. பெண்கள் பலரால் பார்க்கப்படும் பரத்தனே, உன்னைத் தழுவேன். (1311) 232. வாழ்த்தை எதிர்நோக்கி ஊடும்போது தும்மினார். (1312) 233. மலரைச் சூடினாலும் யாருக்குக் காட்டச் சூடினாய் எனச் சினப்பாள். (1313) 234. எல்லாரையும் விடக் காதலிப்பதாகக் கூறினாலும் யார்,யாரை விட என ஊடுவாள். (1314) 235. இம்மைப்பிறவியில் பிரியேன் என்றால் வரும் பிறவியில்…

திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 132. புலவி நுணுக்கம்  தவறுஇல்லாப் போதும், கூடல்இன்ப மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல்              (01-02 தலைவி சொல்லியவை) பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர், நண்ணேன், பரத்த!நின் மார்பு. பெண்களின் பார்வைகளால் கற்பினை இழந்தவனே! உன்னை நெருங்கேன்.   ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை,      “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து. ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என வாழ்த்துவேன் என்று நினைந்து.   (03-10 தலைவன் சொல்லியவை)  …