ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1271-1280)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1261-1270) தொடர்ச்சி)
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
128. குறிப்பறிவுறுத்தல் (குறிப்பால் உணர்த்துதல்)
- நீ மறைத்தாலும் கண்கள் உணர்த்தும் செய்தி உள்ளது. (1271)
- கண்நிறைந்த தலைவிக்குப் பெண்மை பேரழகு. (1272)
- மணிமாலையில் நூல்போல் தலைவியின் அழகில் குறிப்பு உள்ளது. (1273)
- பூ முகையில் மணம்போல் தலைவியின் புன்னகையில் காதல் மணம் உள்ளது. (1274)
- தலைவியின் கள்ளப்பார்வையில் துயர் தீர்க்கும் மருந்து உள்ளது. (1275)
- கலத்தல் தரும் பேரின்பம், அடுத்த பிரிவை உணர்த்துகிறது. (1276)
- தலைவனின் பிரிவை நம்மினும் முன்னதாக வளையல்கள் உணர்ந்துள்ளன. (1277)
- நேற்றுதான் சென்றார் காதலர்; மேனி எழுநாள்போல் பசந்தது. (1278)
- பிரிவை உணர்த்தும் வளையல்களையும் தோள்களையும் உடன் செல்லும் காலடிகளையும் பார்த்துக் குறிப்பை உணர்த்தினாள். (1279)
- கண்ணினால் காமநோய் (கூறிப் பிரியாமைக்கு) உணர்த்தும் பெண்மை, பெண்மைக்குச் சிறப்பு. (1280)
Leave a Reply