கண்ணன் வழிபாட்டைத் தமிழரிடம் இருந்து ஆரியர் கற்றனர் – சு.வித்தியானந்தன்
விட்டுணுவும் கண்ணனும்
இதிகாசங்களிற் கண்ணன் விட்டுணுவின் ஓர் அவதாரமாகவும் ஒரு போர்வீரனாகவும் காட்சியளிக்கின்றான். அவனை ஒரு பெருந்தெய்வமாக அக்காலத்தில் மக்கள் கருதவில்லை. ஆரியர் தமிழரிடமிருந்தே கண்ணன் வழிபாட்டைப் பெற்றிருத்தல் வேண்டும். கண்ணன் உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த இடையர் குலத் தெய்வமே. ஆரியர் பொருளாதாரத்தில் இடையராக இருந்தபோதும் அவர்கள் நாடோடிகளே. மேலும் கண்ணன் கருமை நிறம் வாய்ந்த தெய்வமாக இருப்பதும் அவன் தமிழ்த் தெய்வம் என்று கொள்வதற்கு அறிகுறியா அமையும் எனலாம். கருமை நிற மனிதர் என்று பழைய காலத்தில் ஆரியர் திராவிடரைக் குறித்தனர்.
தென்னாட்டிற்குரிய முல்லை நிலத் தெய்வமான மாயோனே விட்டுணுவாகவும் கண்ணனாகவும் காட்சியளிக்கின்றான். மிகவும் பழைய நூல்களில் விட்டுணு என்ற பெயர் வழங்கப்படவில்லை.
Leave a Reply