fat01
 kalaicho,_thelivoam01

 

கொழுப்பு(2), நிணம்(24) சொற்களுடன் இறைச்சிக்கொழுப்பைக் குறிக்கும் பிறதொடர்களும் சங்கஇலக்கியங்களில் உள்ளன. இப்பொழுது பின்வருமாறு கொழுப்பின் வகைகள் குறிக்கப்படுகின்றன.

கொழுப்பு – lipid   (வேளா., பயி., சூழி.,மீனி.,மனை.,கால். ) ; fat  (வேளா., மனை.,மரு.); adipose ( பயி.,);  cholesterol  ( மரு.); கொழுப்புஅமிலங்கள்–triglycerides (மனை.);

உயர்மாவுச்சத்து – triglycerides ( மரு.). இப்பொழுதுநாம்அமிலம்என்றுசொல்வதைச்சங்கஇலக்கியங்கள்காடி(6) என்றேகுறிப்பிடுகின்றன. ஆதலின் சங்கச் சொற்கள் அடிப்படையில் கொழுப்பு வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

நிணம் – cholesterol

கொழுப்பு – fat

கொழுமை – adipose

கொழுமைமெய்ம்மி – adipose tissue

கொழுமியம் – lipid

கொழுப்பி – kinch

முந்நெய்மை – triglycerides

வெளிப்புறகொழுமியம் – surface lipid

எளியகொழுமியம் – simple lipid

கூட்டுக்கொழுமியங்கள் –   compound lipids

வருவிக்கொழுமியங்கள் – derived lipids

செறிகொழுப்பு – saturated fat

கொழுப்புக்காடி – fatty acid

செறிகொழுப்புஅமிலம் – saturated fatty acid

செறிவுறாக்கொழுப்புக்காடி – unsaturated fatty acid

முதன்மைக்கொழுப்புக்காடிகள் – major fatty acids

முதிராக்கொழுப்பு – crude fat

விலங்குக்கொழுப்பு – animal fat

நொதுமல்கொழுப்பு – neutral fats

கொழுப்புக்கரைஉரனிகள்- fat-soluble vitamins

செறிவுறாப்பன்னிலைக்கொழுப்புக்காடி – poly unsaturated fatty acid

கொழுமிகை (பருவுடல்) – obesity

கொழுமியஈரடுக்கு – lipid bilayer

கொழுமியஉயிரியச்சேர்மி- lipid biosynthesis

கொழுமியக்குமிழி – lipid vesicle

கொழுநெய்- fatty oil

கொழுநெய்விதை –   fatty oil seed

கரைகொழுமியம் – soluble lipid

படலக்கொழுமியம் – membrane lipid

கொழுப்புநீர்மவினைமி – fat liquoring agent

புலனாகாக்கொழுப்பு – invisible fat

மீநிலைக்கொழுமியம்– hyperlipidemia

மீநிலைமுந்நெய்மை – hypertriglyceridemia

மீநிலைக்கொழுமியப்புரதம் –   hyperlipoproteinemia

பால்கொழுமியம் – galacto lipid

மாவின்கொழுமியம் –   flour lipid

வகுத்தூண்நிணம்

நிணக்கல் – cholesterol stone

நிண மிகை –  cholesterolemia

வெண்ணெய்க்கொழுப்பு –   butter fat

குருதிநிணம் –   blood cholesterol

குருதிக்   கொழுமியம் –  blood lipid

கொழுமைஉயிர்மி- adipose cell

கொழுமையுடைமை – adiposity

உயரடர்கொழுமிப்புரதம் – high density lipo protein

கொழுப்புஉயிர்மி – fat cells

கொழுமிப்பெயர்வு – lipid migration

குறையடர் கொழுமிப் புரதம் –   low density lipo protein

நீள்தொடர்முந்நெய்மை – long chain triglyceride

குருதிநீர்மக்கொழுமியம் –   plasma lipids

கொழுப்புஉருஅமைவு – plasticity of fats

ஊனீர்நிணம் – serum cholesterol

கட்புலக்கொழுப்பு – visible fat

கொழுமிச்சிதைவு – lipolysis

கொழுப்புநொதி – lipase

மென்கொழுப்பு – soft fat

மடிக்கொழுப்பி – udder kinch

கொழுப்புச்சுரப்பி – sebaccous gland

கொழு, கொழுப்பு, நிணம், என்னும் சங்கச் சொற்களின் அடிப்படையில் அடிப்படைக் கலைச் சொற்களைக் குறிப்பிட்டிருந்தாலும் பிற இடங்களில் வேறுபாடின்றிக் கொழுப்பு என்றே பயன்படுத்துவர். எனவேதான் இங்கே வேறு சில கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. இவை தொடர்பான அனைத்துச் சொற்களையும் குறிப்பிடின் பலநூறுகளைத் தாண்டும். எனவே, அடையாளமாகத்தான் சில குறிக்கப்பெற்றுள்ளன. இங்குள்ள சொற்களின் அடிப்படையில் பிற சொற்களையும் உணர்ந்து பயன்படுத்தலாம்.

Cholesterol-01