senor citizen

kalaicho,_thelivoam01

  மூதாளர்

– இலக்குவனார் திருவள்ளுவன்

 

மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர்.

இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு :

நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14)

நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10)

பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54)

முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24)

இவற்றின் அடிப்படையில், மூத்த அகவை மக்களைக் குறிப்பிட நாம் மூதாளர் எனச் சொல்லலாம். மூதாட்டி என்னும் சொல் இப்பொழுது வழக்கில் உள்ளது.

மூதாளர் – senor citizen


– இலக்குவனார் திருவள்ளுவன்