காதலர் நாள் கொண்டாடுவோம்!

 

காதலர் நாள் கொண்டாடுவோம் – தாய்மொழிக்

காதலர் நாள் கொண்டாடுவோம்!

 

கள்ளக்காதலர்களை எதிர்ப்போம் – அயல்மொழியைக்

காதலிக்கும் கள்ளக்காதலர்களை எதிர்ப்போம்!

 

அன்புகாட்டலாம் யார்மீதும் – உண்மைக்

காதல் துணைமீது மட்டுமே!

 

காதலனோ காதலியோ இருக்கையில்

பிறரிடம் காட்டும் காதல் காதலல்ல!

 

தலைவியோ தலைவேனா இருக்கையில்

வேறுதுணை தேடுவது கள்ளக்காதலே!

 

தாய்மொழியை விலக்கிப் பிறமொழியைக்

காதலித்தால் அது கள்ளக்காதலே!

கள்ளக்காதல்களை ஒழிப்போம்!

நல்ல காதல்களைப் போற்றுவோம்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்