காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்
காந்தி இலங்கையரா?
அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்?
எங்கள் தமிழீழ மண்ணில் எமக்காக ஈகைச் சாவெய்திய தமிழக தொப்புள் கொடி உயிர் கொடுத்த தோழர்களான முத்துக்குமார் முதலான ஈகியர்களுக்குச் சிலை இல்லை.
மண்ணில் நின்று போராடி வீரச் சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவாலயங்கள் வைக்கத் தடை.
இருந்த மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டு விட்டன..
மாமனிதர் இரவிராசு சிலை ‘மாமனிதர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டு அரச விசிறிகளால் அவமானப்படுத்தப்படுகின்றது.
‘அடங்காப்பற்று’ என வன்னி மண்ணை அயலவரோடு போராடிக் காப்பாற்றி வெற்றியீட்டிப் பின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டாலும் இன்றும் போற்றப்டும் வன்னி மண்ணின் மாவீரன் பண்டாரவன்னியன் சிலை உடைக்கப்பட்டது.
இப்படி இருக்க, காந்தியும் புத்தரும் எம் மண்ணில் எதற்கு?
புத்தர் பெயரால் சிங்களப் பேரினவாதமும் காந்தியின் பெயரால் இந்திய வல்லாதிக்கமும் ஈழ மண்ணைப் பறிக்கும் கொடுமைகள் நடக்கின்றன.
ஈழத்தில் தமிழர் வளங்களை சுரண்டத் துடிக்கும் இந்தியா தமிழகத்தில் ஈழ மக்களை வாட்டி வதைத்து மகிழ்கின்றது.
100 காந்தி சிலைகளுக்காக எங்கள் தமிழர்கள் நிலம் பறிக்கப்படுகிறது ஈழத்தில். ஆனால் தமிழகத்தில் ஈழத்து மக்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றார்கள், வாழ ஓர் இடம் இன்றி!.
இது முறைதானா? அறம்தானா?
-செந்தமிழினி பிரபாகரன்
நயன்மையான கேள்விகள்! ஆனால், இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் மனிதர்களாக இல்லையே! விலங்குகளிடம் வினா எழுப்பி என்ன பயன்?