சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 251-255
251. Abstinence | தவிர்ப்பு விட்டொழித்தல், உண்ணாநோன்பு, துய்ப்புத் தவிர்ப்பு விருப்பமான ஒன்றை விலக்கல் அல்லது செய்யாது விடுதல். காண்க: abstain; 2. Abstaine |
252. Abstract | பொருண்மை; பொழிப்பு; பிழிவு; கருத்தியலான; உரைச்சுருக்கம் எடுகுறிப்பு; சுருக்கக் குறிப்பு, (சுருக்கக்குறிப்புகள்,). ஒரு நூல் அல்லது ஆவணத்தின் அடிப்படைக் கருத்தின் சுருக்கம் மக்கள் அல்லது பொருட்கள் பற்றிய பொதுப்படையான கருத்தைக் சுருக்கப் பொழிவாக எடுத்துரைக்கும் முறை குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986, பிரிவு 12./ Child Labour (Prohibition and Regulation) Act, 1986) |
253. Abstract bill | சுருக்கப்பட்டி மாநில அரசால் சில்லறைச் செலவினப் பொருள்களுக்கான பணத்தைப்பட்டியல் வழிக் கோருகையில் ஆதாரச் செலவுச்சீட்டு இல்லாத நேர்வில், பிற்பாடு சுருக்கப்பட்டியில் இணைத்துக் கோரப்படுகிறது. |
254. Abstract book | சுருக்கப் புத்தகம் கட்டுரைச் சுருக்கங்களின் தொகுப்பு கருத்தரங்கப் பங்கேற்பாளர்களின் பயன்பாட்டிற்காகச் சுருக்கித் தரப்படும் தொகுப்பாகும். |
255. abstract of accounts | கணக்குச் சுருக்கம் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் ஆண்டுக் கணக்கு விவரங்களைச் சுருக்கமாக வெளியிடப்படுவதாகும். பொதுவாக, நிதியாண்டின் நிதிநிலை, செயல்பாட்டின் உண்மையான பார்வையை இது வழங்குகிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply