சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 266-270
266. Abundance | மிகுதி ஏராளம் பேரளவு எ.கா. இம்மன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் இதற்கு முன்பே மிகுதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். |
267. Abundant | ஏராளமான மிகுதியான பேரளவான மிக அதிகமான அல்லது மிகையான அளவில் வழங்குதல். செழிப்பையும் குறிக்கிறது. |
268. Abundant caution | மிகு எச்சரிக்கை எ.கா. : உணர்வு பூர்வமான இவ்வழக்கை நீதிமன்றம் மிகு எச்சரிக்கையுடன் அணுகியுள்ளது. மிகு எச்சரிக்கையுடன் விமானத்தைச் சிறிது நேரம் தரையிறக்குவதாக விமானப் பணியாளர்கள் தெரிவித்தனர். |
269. Abuse | அடா மொழி வசை மொழி ; திட்டுகிற / பழி தூற்றுகிற மொழி ; அதிகார முறைகேடு அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்துதல்; அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ; அதிகார வன்முறை இடுக்கண் சூழலைத் தவறாகப் பயன்படுத்தல்; கெடுநிலை கைப்பற்றல்; கெடுநிலை நெறி கேடு; இழிவாக, தவறாகப் பயன்படுத்து, முறையற்றுப் பயன்படுத்து, தகாதமுறையில் செய், வசை ; உளத்தேர்வைத் தவறாகப் பயன்படுத்துதல்; ஏகபோக உரிமையைத் தவறாகப் பயன்படுத்துதல்; நீதிநெறியைத் தவறாகப் பயன்படுத்தல்; செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தல்; சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தல்; ஏசு ; நிந்தி ; கொடுமைப் படுத்து;. கைப்பற்றல்; வசைபாடு; தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்படுத்துதல்; பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல்; தீங்கீட்டுப் பயன்கேடு தூற்று; நிந்தை, பழிச்சொல், நெறிதவறுதல்; முறையற்ற அதிகாரப் பயன்பாடு வசவு; ஏச்சு ஒருவரையோ விலங்கையோ உடல் நிலையில் அல்லது உள்ளநிலையில் அல்லது இரண்டு நிலையிலும், அல்லது பாலியல் முறையில் தவறாக அல்லது முறைகேடாகப் பயன்படுத்தலைக் குறிப்பிடுகிறது. ஒருவர் மீதான ஒழுங்கீனமான செயல், கொடூரமான செயல், வன்முறைச் செயல்,பாலியல் தாக்குதல் முதலிய முறையற்ற செயல்களையும் குறிக்கிறது. மனைவி, குழந்தை, முதிய பெற்றோர், பேணவேண்டிய பொறுப்பிற்குரியவர் போன்ற உறவுமுறையில் சிறப்புப் பொறுப்பு உள்ள ஒருவரைத் தவறாக நடத்துவது அல்லது புறக்கணிப்பது நெறிகேடாகும். ஒரு பொருளைச் சட்டத்திற்கு மாறான முறையில் அல்லது நியாயமற்ற முறையில் பயன்படுத்துவது முறையற்றப் பயன்பாடாகும். மெய், மன அல்லது பாலியல் ஊறு நேரும் வகையில் உடல், உள்ளத் தவறான பண்டுவம்(சிகிச்சை) பார்ப்பது முறைகேடான செயலாகும். மனைவி, குழந்தை, முதிய பெற்றோர், பேணவேண்டிய பொறுப்பிற்குரியவர் போன்ற உறவுமுறையில் சிறப்புப் பொறுப்பு உள்ள ஒருவரைத் தவறாக நடத்துவது அல்லது புறக்கணிப்பது நெறிகேடாகும். ஒரு பொருளைச் சட்டத்திற்கு மாறான முறையில் அல்லது நியாயமற்ற முறையில் பயன்படுத்துவது முறையற்றப் பயன்பாடாகும். குழந்தைத் தகாப்பாடு – சிறுவர் சிறுமியரைத் தகாப்பயன்பாட்டில் ஈடுபடுத்தல். சிறார் மீது தவறான பாலியல் பயன்பாட்டைக் கொள்ளல் முதலான வேண்டுமென்றே அல்லது கவனிப்பற்ற(புறக்கணிப்பிலான) தகாப்பாடு குழந்தைத் தகாப்பாடு ஆகும். பெற்றோர் அல்லது பேணாளர் வேண்டுமென்றே அல்லது புறக்கணிப்புச் செயல் அல்லது உரியவாறு செயல்படத்தவறுதல் குழந்தையின் தகாப்பயன்பாடு, சீரழிவு அல்லது இறப்பினை விளைவிக்கும். செயல் அல்லது செய்தக்க செய்யாமை, குழந்தைக்கு உடனடியான கடுமையான தீங்கினை விளைவிக்கும். மூத்தவர்களைத் தகாப்பாட்டிற்கு ஆளாக்குதல் என்பதில், அவரது அல்லது அவளது பிள்ளைகள் அல்லது பேணுநர் தாக்குதல், ஏச்சு, தனிமைப்படுத்தல் உணவு தராமை அல்லது போதிய உணவுதராமை முதலியனவற்றிற்கு உள்ளாக்கவதும் அடங்கும். பாலியல் முறைகேடு 1. சட்ட முரணான பாலியல் செயல். 2. ஒருவரின் இசைவுடன் அல்லது இசைவின்றி அவருடன் சட்ட முரணான பாலியல் செயற்பாட்டில் ஈடுபடல். இச்செயற்பாடு அல்லது தொடர்பு என்பது வலிமையைப் பயன்படுத்தி அல்லது வன்முறை அச்சுறுத்தல் மூலம் திணிக்கப்படுவது ; இத்தொடர் மாறுபடும். ஆனால், இச்செயற்பாடு அல்லது தொடர்பு, பொதுவாகக் கற்பழிப்பாக இல்லாமல், சில நேரங்களில் கற்பழிப்பையும் உள்ளடக்கியதே. உடலின்பத் தகாப்பாடு, பாலியல் தகாப்பாடு, என்றும் இஃது அழைக்கப் பெறும். வாழ்க்கைத்துணைத்தகாப்பாடு: வாழ்க்கைத் துணைவன் அல்லது துணைவியால் ஏற்படும் தகாப்பாட்டைக் குறிக்கிறது. |
270. abuse of authority | அதிகார முறைகேடு அரசில், முகமையில், நிறுவனத்தில், பொது அமைப்பில், அல்லது பிற அதிகார மையத்தில் தனக்குள்ள அதிகாரத்தை அல்லது தன் பொறுப்பின் மூலம் பெறும் அதிகாரத்தைத் தன்னலம் கருதியோ, தன்னைச் சார்ந்தவர் நலன் கருதியோ, ஆதாயத்திற்காகவோ, பிறருக்குத் தொல்லை தருவதற்காகவோ, பிறரைப் பழி வாங்கவோ அச்சுறுத்தியோ மிரட்டியோ வற்புறுத்தியோ அலுவல் கடமைகளில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்தோ சட்டத்தின்படியான செயலைச் செய்யாமலோ முறை தவறிப் பயன்படுத்துவதாகும். அதிகார முறைகேடு ஊழலுக்கு வழி வகுக்கிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply