அசித்தர்

பேசி – 93827 19282 

   (முன் இதழ்த் தொடர்ச்சி)

அசித்தர்

அசித்தர்

சாமரபுசுபம்         –     கமுகு

சாரணம்              –     அம்மையார் கூந்தல்

சிகிச்சை              –     பண்டுவம்

சிகை                    –     முடி, மயிர்

சிங்கி                  –     மான் கொம்பு

சித்தப்பிரமை     –     மனமயக்கம், பித்தியம்

சிந்தூரம்              –     செந்தூளத் தாது

சிலேபி                –     தேன்குழல், தேன்முறுக்கு

சிவலிங்கம்        –     சிவயிலங்கம்

சிவவாக்கியர்    –     சிவமொழியர்

சிறுபஞ்சமூலம் –     சிற்றைவேர்

சின்முத்திரை      –     அறிவு முத்திரை

சீக்கு                   –     நோய்

சீத்தா                  –     நளிரம்பழம், செதிற்பழம்

சீதபேதி               –     குளிரக் கழிச்சல்

சீதளம்                 –     குளுமை, குளிர்ச்சி

சீரணம்                –     செரியாமை

சீனி                    –     சக்கரை

சுக்கிலம்              –     விந்து, வெண்மை

சுகவீனம்              –     நலக்கேடு

சுகாசனம்             –     இயல்பிருக்கை

சுகாதாரம்             –     நலவழி

சுத்தசலம்             –     தண்ணண்ணீர், தூயநீர்

சுத்தி                   –     தூய்மை, குற்றநீக்கம்

சுரசம்                 –     காய்ச்சினசாறு,கருக்குநீர்

சுவாசித்தல்        –     மூச்சுவிடுதல், உயிர்த்தல்

சுறுமாக்கல்         –     மைக்கல்

சூத்திரம்               –     நூல்,நூற்பா

சூதகம்                –     மாதவிடாய்,

தூய்மைக் காலம்

சூதம்                   –     இதளியம்

சூப்பு                   –     சாற்றுக்குழம்பு, சாற்றம்

சூர்ணம்               –     பொடி

சூரியகாந்தி          –     ஞாயிறுதிரும்பி, ஞாயிறு வணங்கி

சூரியபுடம்             –     வெயிற்புடம்

சூரியநமசுகாரம்-           கதிரவ வணக்கம், ஞாயிறு வணக்கம்

சேட்டுமம்,

     சிலேத்துமம் –         கோழை,ஐயம்

சையோகம்         –     புணர்ச்சி, கலக்கை

சைவம்                –     சிவம்

சொப்பனகலிதம் –       கனவு விந்தொழுக்கு

சோதிதம்              –     குருதி

சோதிடம்             –     கணியம்

சேமியா               –     மாவிழை

சோடா                –     உவர்க்காரம், உப்பகம், காலகம்

சோம்பு                –     பெருஞ்சீரகம்

சௌசௌ             –     பச்சல், பச்சற்காய்

தசவாயு               –     பதின்வளி

தண்டால்             –     ஊர்ந்தெழல்

தத்துவம்              –     மெய்யியல்

தம்பனம்              –     நிலைநிறுத்தல்

தமோகுணம்      –     முக்குணக்காரணி

{காமம், வெகுளி, மயக்கம்}

தயிலம்               –     நெய்மம், நெய்ம்மருந்து

தற்சனி                –     சுட்டுவிரல்

தனியா                –     கொத்துமல்லி, மல்லி விதை

தனுர்வாதம்        –     கீல்வலிப்பு நோய்

தாதி                         –     செவிலித்தாய்

தாம்பூலம்             –     தம்பலம்

தாரணை              –     ஒழுங்கு, மனநிலை நிறுத்த ஓகம்

திமிர்வாதம்        –     மெய்மரப்பு

திமிர்வாயு                  –     பக்கவலிப்பு

திரவம்                –     நீர்மம்

திராட்சை             –     கொடிமுந்திரி

திராவகம்             –     எரிநீரம், தீநீர்

திரிகடுகம்             –     முக்கடுகம்

திரிபலம்              –     முப்பழம்

தியானம்              –     ஊழ்கம், சிந்தனை

தீட்சை                –     நோன்பு, நோன்புறுதி

தீபனம்                –     பசி

துத்தநாகம்     –     வெள்ளடம்

துந்திரோகம்    –     பெருவயிறு

துரியம்          –     தன்வயமேனிலை

துவாலை       –     துணித்துண்டு

தூலதேகம்      –     பருவுடல்

தேகம்           –     உடம்பு

தேநீர்            –     கொழுந்து நீர்,தழைநீர்

தேவதாரு       –     வண்டு கொல்லி,நெட்டிலங்கம்

தோசம்          –     குற்றம், தீவினை

நசியம்          –     மூக்கு மருந்து

நவநீதம்        –     வெண்ணெய்

நவபாடாணம்  –     தொண்ணச்சு

நவரசம்         –     தொண் சுவை

நவலோகம்     –     தொண்மாழை

நளபாகம்       –     நாணலன் சமையல், மீத்திறன் சமையல்

நாக பற்பம்          –     செவ்விதளியம் நீறு

நாகதெந்தி      –     நேர்வாளம்

நாசி             –     மூக்கு

நாடி             –     கொப்பூழ், மான்மதம்

நாதம்           –     சினைமுட்டை

நாபிக்கொடி    –     கொப்பூழ்க்கொடி

நாபிரம்         –     விந்து          

நேத்திரம்       –     கண்

பச்சைக் கற்பூரம்-     மருந்தெரியணம்

பசு               –     ஆ, மாடு, எருது

பஞ்சகமம்       –     ஐம்பூடு

பஞ்சகவ்வியம் –     ஆனைந்து

பஞ்சாமிர்தம்   –     ஐந்தமுதம்

பட்டாணி       –     உருளங்கடலை

பத்திரி           –     இலை

பப்பாளி         –     செங்கொழும்பை

பம்பளிமாசு     –     பேரின்னரத்தம்

பயித்தியம்      –     பித்து

பர்ப்பி           –     தெங்கினிமா

பரிகாரம்        –     கழுவாய், நீக்குகை,விலக்கு

பரிணாமம்      –     திரிபாக்கம், படிமலர்ச்சி

பரிபாசை        –     குறியீடு, குழுஉக்குறி, மறைபொருள்

பரியாயம்       –     ஒரு பொருட்பன்மொழி

பரீட்சை         –     ஆய்வு, தேர்வு

பவுத்திரம்       –     குறிக்கட்டி

பற்பம்           –     துகள், திருநூறு, நீறு

பறங்கிக்காய்   –     வெண்பூசணி, பெரும்பூசணி

பச்சி             –     தோய்ச்சி. தோச்சி,மாவேய்ச்சி, மாவேச்சி

பாண்டு          –     வெள்ளை,மஞ்சள் பிணி, நீர்க்கோவை