சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது
சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது
- இயற்கை ஒலிகளையுடைய சுருங்கிய எழுத்துக்களை உடைமை.
- ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்களைப் பெருவாரியாக உடைத்தாயிருத்தல்.
- சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும்போல் ஒற்றுமை உடைமை.
- தெளிந்த நடையையும், இனிய ஓசையையும், பா அமைதியையும் உடைமை.
- பகுதியும், அதனிற் தோன்றும் சொற்களும் மாறுபடாமை.
- காலம் இடம்தட்பவெப்பங்களால் மாறுபடாமை
- என்றும் அழியாப் புத்தழகு உடைமை.
- புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை.
- பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்தற்கு ஏற்ற திறன் உடைமை.
- பிறமொழி உதவியின்றி இயங்கும் ஆண்மையும், பலமொழிகளுக்குத் தாயாயிருக்கும் பெண்மையும் உடைமை.
- பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்ற இருவகை வழக்கிலும் ஒரே மாதிரியாக இயங்குந்தன்மை உடைமை.
- ஒலி வடிவு, வரி வடிவு ஆகிய இருவித வழக்குகளுக்கும் ஏற்ற இயைபு உடைமை.
- அருள் நிலைத்தற்கேற்ற மறைமொழிகளை உடைமை.
- பல்கலை நூற்களை உடைமை.
- இலக்கண வரம்பு உடைமை.
- வழக்கு வீழ்ந்தொழியாமல் என்றும் ஒரு படித்தாயுள்ளதன்மையுடைமை.
Leave a Reply