சுந்தரச் சிலேடைகள் 10 : கறிவேப்பிலையும் சிப்பியும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 10
கறிவேப்பிலையும் சிப்பியும்
பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து,
வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து
நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே
பொற்சிப்பி வேப்பிலைக் கீடு.
பொருள்:
1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன.
2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன.
3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன.
4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர்.
5) அதனால் போவோர் வருவோர் காலில் மிதிபட்டுத் துன்புறுகின்றன.
6) நற்பயன் தந்தாலும் பயனைமட்டுமே எடுத்துக்கொண்டு இவற்றை எறிந்து விடுவதால் இவை வெட்கப்படுகின்றன.
எனவே சிப்பியும் , கறிவேப்பிலையும் ஒன்றேயாகும்
Leave a Reply