தங்கம்தந்தவர் இனம் படுகொலை genocideandgold

உதவுநர் இனத்தை அழிக்கத் துணை நிற்கும் இந்தியம்!

ஐம்பது ஆண்டுகளுக்கு,
இதே மாதத்தில் (20.11.1964 அன்று சென்னையில் )
இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதியாக
(இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக )
அன்றைய தலைமை அமைச்சர்
இலால் பகதூர் சாத்திரி அவர்களிடம்
1,00,00,000 கிராம் தங்கத்தைத்
தமிழ்த் தாயின் பிள்ளைகள் வாரிக் கொடுத்தார்கள் !

ஆனால் …

சொந்த உடன் பிறப்புகள் கொத்துக் கொத்தாகக்
கொன்று குவிக்கப் பட்டது கண்டு தமிழகம் துடித்த போதும் ,

தன் பிள்ளைகள் தன் கண்ணெதிரே கொன்று குவிக்கப் படுவதை
கண்டு இந்தியத் தாயிடம் ,
தமிழ்த் தாய் கண்ணீர் வழிய கதறி அழுத போதும்…

தமிழ் ஈழத் தேசத்தைச், செஞ்சகதியாக ஆக்கிய
சிங்களப் பேரின வாதத்திற்கு, இந்தியா துணையாக நின்றது.

இன்றைக்கும் ,

பன்னாட்டு அரங்குகளில் சிங்களனுக்கு ஆதரவாக நிற்கிறது .
கொலைக் குற்றவாளிகளுக்குச்
சிவப்புக் கம்பளம் விரிக்கப் படுகிறது .

சாகச் செய்தவனுடன் உட்கார்ந்து
தில்லியிலே,
சம பந்தி போசனம் நடத்துகிறார்கள் .

 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந் நன்றி கொன்ற மகற்கு.

வேங்கடசாமி சீனிவாசன்