தலைப்பு-தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் ; thalaippu_ilakkuvanar vazhiyil_nattramizh_ila.thiru

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  வழியில் நற்றமிழ் பேணுவோம்!

  படிக்கும் பருவத்திலிருந்தே தனித்தமிழ்நடை பேணியவர்; தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்ததுடன் – தனித்தமிழ் வித்தைப்பிறரிடம் விதைத்தவர்; தனித்தமிழ் அன்பர்களைத் தம் உறவாகவும் தனித்தமிழுக்கு எதிரானவர்களைத் தமக்குப் பகையாகவும் கருதி வாழ்ந்தவர்; தனித்தமிழ் வளர்ச்சிக்கெனவே இதழ்கள் நடத்தியவர்; அவர்தாம் தனித்தமிழ்க்காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவர் புகழுடல் எய்திய நாளில்(ஆவணி 18 / செட்டம்பர் 03) அவரது நினைவைப் போற்றும் நாம்  அவரது கனவுகளை நனவாக்க அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பின்வரும் முழக்கங்களைக் கடமைகளாகக் கொண்டு நிறைவேற்றுவோம்.

தமிழில் எழுதுவோம்!

தமிழில் பேசுவோம்!

தமிழில் பெயரிடுவோம்!

தமிழில் பயில்வோம்!

மொழியே விழி! விழியே மொழி! என்று கிளர்ச்சி கொள்வோம்!

“மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்!

மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்!”

மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை!”

என்பனவற்றை உணர்ந்து,

மொழிவாழ்வுக்குமுயல்வோம்!

தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!

தமிழர் வாழ்ந்தால் தமிழ்நாடு வாழும்!

தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு!

ஆதலின்

தமிழ்ப்புகழ்பரப்புவோம்!

தமிழரின்அரசைஆக்குவோம்! இனித்

தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!

தமிழகம் உலகத்தின் தாயகம்! -இதைத்

தரணியோர் மதித்திடச் செய்குவோம்!

எனவே,

எல்லாம் அளித்தும் இன்தமிழ் காப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 149, ஆவணி 12, 2047 / ஆக.28, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo