தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2
(தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1 – தொடர்ச்சி)
தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2
இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்மசிரீ உ.வே. சுவாமிநாத(ஐய)ரவர்கள் தாம் பதிப்பித்த சிலப்பதிகாரத்தினும் மணிமேகலையிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்களெழுதி யிருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புக்களும் அப்புலவர்களை யாதரித்தாரைப்பற்றிய குறிப்புகளும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னுந் தாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விசயங் களையுங் கூட்டித் தனி நூலாக வெளிப்படுத்தப் போகின்றனரெனக் கேள்வி யுற்றுக் கழிபேருவகை பூக்கின்றாம். இம்முயற்சி கைகூடுமாறு நம் ஐயரவர் கட்கு இறைவன் திருவருள் புரிவாராக.
இடையிற் பாறைக்கிணறு வெட்டப்புகுந்து முகவையம்பதி முதலிய விடங்களிற் பெரும்புகழ் படைத்தவரும், திருவாமத்தூரிலிருந்து காலங் கழித்தவருமாகிய திருப்புகழ்ச் சுவாமிகள்’ என்ற முருகதாச சாமியார் இயற்றிய *‘புலவர் புராணம்’ என்றதோர் நூல் வெளிப்போந்துளது. இந் நூல் முழுதுஞ் செய்யுளானியன்றுளது. சாமானியமாகப் புலவர் வீடுகளிற் கதையாகச் சொல்லிக்கொள்ளும் விசயங்களெல்லாம் ஒருவாறு தொகுத்து இந்நூலின்கட் கூறப்பட்டுள. காலவரையறை, நூலாராய்ச்சி முதலியன இந் நூலின்கட் கண்டிலேம். இதனேயொரு காப்பியமாகக் கருதி ஆராய்தல் ஈண்டு. எடுத்த விசயமன்று. தமிழ்ப் புலவர் சரிதமாகுமட்டில் இஃது ஓராற்றாற் பயன்படுவதாகும்.
இதுகாறும் தமிழ்ப் புலவர் சரித விசயமாக வெளிப்பட்ட நூல்களைப் பற்றி யுரைத்தாம். இனிச்சிற்சில நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அவ்வந்நூலின் பதிப்புரைக்கண் நூலாசிரியர் வரலாறுகளும் தாங்கள் ஆராய்ச்சி செய்தமட்டிற் கூறியிருக்கின்றனர். சிலர் இக்காலத்தில் வெளிப்படும் தமிழ்ப் பத்திரிகைகளில் விசயங்களாகத் தமிழ்ப் புலவர் சிலரைப்பற்றி யெழுதியிருக்கின்றனர். இதற்கிடையிற் சில்லாண்டுகட்கு முன்னர் அட்டா வதானி – வீராசாமி(செட்டியார்) என்பார் ‘வினோத ரச மஞ்சரி‘ என்பதோர் நூலியற்றி யிருக்கின்றனர். அஃது அதன் பெயர்ப் பொருளின்படி விநோ தார்த்தமாக எழுதப்பட்டதோர் கதைத் தொகுதியெனக் கொள்ளற்பாலதே யன்றித் தமிழ்ப் புலவர்களைப் பற்றியதோர் மெய்ச் சரிதமாகக் கொள்ளப்படுவ தன்று. எனவே குறைபாடுகளனைத்தும் நீங்கி, யாவரும் ஏற்று மேற்கொள்ளத் தக்கதாய், தமிழ்ப் புலவராவானைவரையும்பற்றி ஒருங்கே கூறுவதாய் அன்னாரியற்றிய நூல்களின் ஆராய்ச்சிகளுமுடையதாய்க் காலவரையறையும் தெளிவு பெற நியாயவாயிலாற் காட்டுவதாய் ஒரு தமிழ் நூல் இதுகாறும் இவளிப்பட்டிலது. அத்தகையதொன்று என்று வெளிப்படுமோ? அறியோம். இக்க விசயத்தைத் குறித்து நம்முடைய மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரிகள் நன்கு கவனித்து நடப்பாராக.
வி.கோ. சூ.
(*அது கணம் பொருக்திய திவான் பகதூர் வ.கிருட்டிணமாசாரியாவர்களாற் பதிப்பிக்கப்படுகின்றது. முதற் பாகம் வெளியாயிற்று. பன்னிரண்டு பாகங்களும் விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றோம். இதன் முதற் பாகத்திற் சில பகுதிகள் சமது சருவ கலாசாலையின் பிரதம கலா பரீட்சைக்கும், கலா வித்தியார்த்திபட்ட பரீட்சைக்கும், கலாவித்தியார்திபட்ட பரீட்சைக்கும், பாடமாக எற்படுத்தப்பட்டுள. (இப் பொழுது இந் நூல் முழுதும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.)
(தொடரும்)
பரிதிமாற்கலைஞர்
–தமிழ்ப்புலவர் சரிதம்
Leave a Reply