yaazh02

  இசைநாடகத் துறைக் கலைச்சொற்கள் அனைத்தும் இன்று வடமொழியாக்கப்பட்டு வழங்குகின்றன. உலகிலேயே முதலில் தோன்றிய மூத்த இசை என்று போற்றப்படும் இசை, தமிழன் கண்ட தமிழிசை, இன்று ‘கருநாடக சங்கீதம்’ என்று பெயர் மாறியுள்ளது. மதிவாணனார் செய்த ‘நாடகத்தமிழ்’ போன்ற நூல்களிற் கூறப்பட்ட தமிழன் கண்ட கூத்து முறை இன்று ‘பரதநாட்டியம்’ என்று பெயர் மாறியுள்ளது. பெயர் மாறிப்போன தன் பிள்ளைகளையே இன்றைய தமிழன்,

“யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ?”

என்று மயங்கிப் பாராமுகமாய் இருந்து வருகிறான்.

– முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம் தமிழன் படைத்த கலைக்கருவூலம்: பக்கம்14

Thiru-murugan_ira03