திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3/6 : பேராசிரியர் வெ.அரங்கராசன்
(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2/6 தொடர்ச்சி)
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6
6.1.21.நாடோறும் நாடுக மன்னன் [குறள்.520]
அறிபொருள்:
நாள்தோறும் ஆட்சியை ஆராயும் நாடாள்வோர் மனம்
6.1.22.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை [குறள்.282]
அறிபொருள்:
மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்தலை ஆராயும் மனம்
6.1.23.உடையர் எனப்படுவ[து] ஊக்கம் [குறள்.591]
அறிபொருள்:
ஊக்கம் உள்ள மனம்
6.1 24.உள்ளுவ[து] எல்லாம் உயர்வு
[குறள்.596]
அறிபொருள்:
உயர்ந்தவற்றையே எண்ணும் மனம்
6.1.25.எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
[குறள்.666]
அறிபொருள்:
எண்ணியதை அடைய எண்ணியதையே எண்ணிப் பார்க் கும் திண்ணிய மனம்
6.1.26.இகல் [குறள்.853]
அறிபொருள்:
மாறுபாடு இல்லா மனம்
6.1.27.உட்பகை [குறள்.883]
அறிபொருள்:
வெளிப்படாது உள்ளிருக்கும் உள்பகை இல்லா மனம்
6.1.28.மனத்து எண்ண அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்
தொகுப்பு:
- ஒரு நொடியும் சினம் கொள்ளா மனம்
- குற்றம் அற்ற தூய மனம்
- ஆராவார உணர்வு அற்ற மனம்
- பொறாமையும் பேராசையும் அற்ற மனம்
- தன் மகனை உயர்பண்பன் எனக் கேட்டு மகிழும் தாயின் மனம்.
- குற்றம் அற்றாரது நட்பை மறவா மனம்
- ஒருவர் செய்த உதவியை என்றும் மறவா மனம்
- கோணல் இல்லாத உறுதிப்பாட்டு மனம்
- பிறர் செய்த அளவு கடந்த துன்பத்தைப் பொறுத்தலைவிட அதனை மறக்கும் மனம்
- பிறர் குற்றத்தையும் தமது குற்றம்போல் ஆராயும் மனம்
- மறந்த நிலையிலும் பிறருக்குக் கேடு எண்ணா மனம்
- தமக்கு ஒப்ப எல்லாரையும் ஆராயும் சமன்மை மனம்
- தன் உயிர், தான் எனும் செருக்கு முழுமையாக இல்லா மனம்
- வஞ்சகம் இல்லா மனம்
- பிறர் பொருளைப் பறிக்க எண்ணா மனம்
- பிற, பிறர் உயிர்களையும் தமது உயிர்போல் எண்ணும் மனம்
- பற்றினை விட்டமையால் அமைந்த துன்பம் அற்ற மனம்
- ஐயத்தின் நீங்கிய தெளிந்த மனம்
- தற்பெருமை கொள்ளா மனம்
- தம்மால் செய்ய முடிந்ததை ஆராயும் மனம்
- நாள்தோறும் ஆட்சியை ஆராயும் நாடாள்வோர் மனம்
- மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்தலை ஆராயும் ஆட்சியாளர் மனம்
- ஊக்கம் உள்ள மனம்
- உயர்ந்தவற்றையே எண்ணும் மனம்
- எண்ணியதை அடைய எண்ணிதையே எண்ணிப் பார்க்கும் திண்ணிய மனம்
- மாறுபாடு இல்லா மனம்
- வெளிப்படாது உள்ளிருக்கும் உள்பகை இல்லா மனம்
6.2.0.உணர்வு எண்ண அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்
குறள்கள் — 3
6.2.1.அறத்தான் வருவதே இன்பம் [குறள்.39]
அறிபொருள்:
அறமே இன்பம் என்னும் உணர்வு
6.2.2.நெஞ்சத்துக் கோடாமை [குறள்.118]
அறிபொருள்:
ஒரு பக்கம் சாயாத நடுநிலை உணர்வு
6.2.3.ஈத்[து உவக்கும் இன்பம் [குறள்.228]
அறிபொருள்:
ஏழைகளுக்குக் கொடுத்துப் பெறும் இன்ப உணர்வு
6.2.4.உணர்வு எண்ண அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள்
தொகுப்பு:
- அறமே இன்பம் என்னும் உணர்வு
- ஒரு பக்கம் சாயாத நடுநிலை உணர்வு
- ஏழைகளுக்குக் கொடுத்துப் பெறும் இன்ப உணர்வு
6.3.0.பண்பு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 14
6.3.1.0.அடக்கம் அமரருள் உய்க்கும் [குறள்.121]
அறிபொருள்:
தெய்வ நிலைக்கு உயர்த்தும் அடக்கப் பண்பு
6.3.2.அடக்கம் ஆக்கம் உயிர்க்கு [குறள்.122]
அறிபொருள்:
உயிருக்கு நலம் தரும் அடக்கப் பண்பு
6.3.3.அறி[வு]அறிந்[து]
ஆற்றின் அடங்கப்பெறின் [குறள்.123]
அறிபொருள்:
அறிய வேண்டியன அறிந்து அறவழியில் அடங்கும் பண்பு
6.3.4.நிலையின் திரிய[து] அடங்கி [குறள்.124]
அறிபொருள்:
தமது நிலையிலிருந்து தாழாத அடக்கப் பண்பு
6.3.5.எல்லார்க்கும் நன்[று]ஆம் பணிதல் [குறள்.125]
அறிபொருள்:
நன்மை நல்கும் பணிவுப் பண்பு
6.3.6.ஐந்[து] அடக்கல் [குறள்.126]
அறிபொருள்:
ஐம்புலன்களின் அடக்கப் பண்பு
6.3.7.நாகாக்க [குறள்.127]
அறிபொருள்:
நா அடக்கப் பண்பு
6.3.8.கற்[று]அடங்கல் [குறள்.130]
அறிபொருள்:
கற்று அடங்கும் பண்பு
6.3.9.பிறன்இயலான்
பெண்மையை நயவாதவன் [குறள்.147]
அறிபொருள்:
பிறரது மனைவியை விழையாப் பண்பு
6.3.10.காட்சிக்[கு] எளியன் குறள்.386]
அறிபொருள்:
எளிமைப் பண்பு
6.3.11.கண்னோடத்[து] உள்ள[து] உலகியல் [குறள்.572]
அறிபொருள்:
உலகம் சார்ந்த இரக்கப் பண்பு
6.3.12.நாணும் [குறள்.952]
அறிபொருள்:
பழிக்கு நாணும் பண்பு
6.3.13.அற்றம் மறைக்கும் பெருமை [குறள்.980]
அறிபொருள்:
பிறர் குற்றத்தை வெளியில் சொல்லாப் பெருமைப் பண்பு
6.3.14.மக்கள்பண்பு [குறள்.997].
அறிபொருள்:
மாண்பு மிக்க மனித நேயப் பண்பு
6.3.15.பண்பு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:
- தெய்வ நிலைக்கு உயர்த்தும் அடக்கப் பண்பு
- உயிருக்கு நலம் தரும் அடக்கப் பண்பு
- அறிய வேண்டியன அறிந்து அறவழியில் அடங்கும் பண்பு
- தமது நிலையிலிருந்து தாழாத அடக்கப் பண்பு
- நன்மை நல்கும் பணிவுப் பண்பு
- ஐம்புலன்களின் அடக்கப் பண்பு
- நா அடக்கப் பண்பு
- கற்று அடங்கும் பண்பு
- பிறரது மனைவியை விழையாப் பண்பு
- எளிமைப் பண்பு
- உலகம் சார்ந்த இரக்கப் பண்பு
- பழிக்கு நாணும் பண்பு
- பிறர் குற்றத்தை வெளியில் சொல்லாப் பெருமைப் பண்பு
- மாண்பு மிக்க மனித நேயப் பண்பு
6.4.0.அறிவு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3
6.4.1.உலகம் தழீஇய[து] ஒட்பம் [குறள்.425]
அறிபொருள்:
உலகு தழுவிய பரந்த அறிவு
6.4.2.எதிரதாக் காக்கும் அறிவு [குறள்.429]
அறிபொருள்:
பின் வருவதை முன்னரே அறியும் அறிவு
6.4.3.நன்றின்பால் உய்ப்ப[து] அறிவு[ குறள்.422]
அறிபொருள்:
நல்லனவற்றுக்குள் செலுத்தும் அறிவு
6.4.4.அறிவு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:
- உலகு தழுவிய பரந்த அறிவு
- பின் வருவதை முன்னரே அறியும் அறிவு
- நல்லனவற்றுக்குள் செலுத்தும் அறிவு
7.0.0.சொல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — 20 குறள்கள்
7.2.1.நிறைமொழி [குறள்.28]
அறிபொருள்:
நிறைவான சொற்களைப் பேசுதல்
7.2.2.தம் மக்கள் மழலைச் [குறள்.66]
அறிபொருள்:
குழந்தைகளின் இனிய மழலைச் சொல்
7.2.3.மகன்தந்தைக்[கு] ஆற்றும் உதவி, இவன்தந்தை
என்நோற்றான் கொல்என்னும் சொல்..? [குறள்70].
அறிபொருள்:
“இவன் தந்தை என்ன தவம் செய்தானோ..?” என மகன் சமுதா யத்தைச் சொல்லவைக்கும் சொல்
(தொடரும்)
பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,கோவிற்பட்டி 628 502
Leave a Reply