(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி)

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6

8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997]
அறிபொருள்:
மனித நேயம் சார்ந்த வாழ்க்கை

8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655]
அறிபொருள்:
இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை

8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788]
அறிபொருள்:
நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல்

8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934]
அறிபொருள்:
சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை

8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311]
அறிபொருள்:
பிறர்க்குத் துன்பம் செய்யாமை

8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321]
அறிபொருள்:
எந்த உயிரையும் கொல்லாமை

8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும் [குறள்.972]
அறிபொருள்:
பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல்

8.8.0.சமுதாயம் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு

1. எல்லா உயிர்களிடத்திலும் அருள் பொழிந்து வாழ்தல்
2. முடிந்த அளவு முடிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது அறம் செய்தல்
3. வேற்றுமைகள் மறந்து வாழ்தல்
4. எந்தத் துறையானாலும், அதில் புகழ் பெறும்படித் தோன்றுதல்
5. உலகம் நிலைபெற உயிர்களிடத்தில் அருள் காட்டுதல்
6. என்றும் எந்த உயிருக்கும் தீமை செய்யாமை
7. கற்றவர்கள் கூடிக் கல்வி அறிவைப் பரிமாறிக் கொள்ளல்
8. எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் நல்லன கேட்டல்
9. ஆய்ந்து அறிந்த அறிஞர்களுடன் கலந்து ஆராய்ந்து செயல்படுதல்
10. மனித நேயம் சார்ந்த வாழ்க்கை
11. இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை
12. நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல்
13. சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை
14. பிறர்க்குத் துன்பம் செய்யாமை
15. எந்த உயிரையும் கொல்லாமை
16. பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல்

8.9.0.நாட்டு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 5

8.9.1.செங்கோல் குடி ஓம்பல் [குறள்.390]
அறிபொருள்:
குடிகளைக் காக்கும் நல்ல ஆட்சி

8.9.2.கடிது ஓச்சி மெல்ல எறிக [குறள்.562]
அறிபொருள்:
கடுமையாகத் தண்டித்தல் போலக் காட்டி இறுதியில் மென்மையாகத் தண்டித்தல்

8.9.2.1.மேற்கோள் உரை

தண்டனையின் தன்மையினைக் குற்றவாளிக்கு உணர்த்த வேண்டிய போக்கினையும் தெளிவாகத் தருகின்றார் திருவள்ளுவர். 
கடிதுஓச்சி மெல்ல எறிக, நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர் [குறள்.562]

அஃதாவது. தண்டனையானது உச்சத்தைத் தொடுவதுபோல அமைந்திடினும், உள்ளீடாக உள்ளத்தைத் திருத்தக் கூடிய மென்மைத் தன்மை மேவப்பட்டிருக்க வேண்டும் என்று அமைத்து உளவியல் அணுகுமுறையோடு தண்டனை முறைகளை நிறுவியுள்ளார் திருவள்ளுவர்.

“கடும்தண்டனையைக் காட்டிலும், அளவு கடக்காத முறையில் ஒத்த தண்டனையை விதித்தால்தான், அரசின் ஆக்கம் நீங்காமல் நிற்கும் என்பது குறள் நெறி. இஃது இன்றைய சட்டத்தில் நடைமுறையில் உள்ள கொள்கையாகும். இவ்வாறு கையிகந்ததாக அன்றி, கடிது ஓச்சி மெல்ல எறியும் ஒறுத்தல் முறையே இன் றைய சட்டம் வகுக்கும் தண்டனை முறையாகவும் அமைகின்றது.” என்ற சட்ட அறிஞர் மா.சண்முகசுப்பிரமணியம் அவர்களது கருத்தமைவானது, காலம் கடந்தும் பொருந்தக்கூடிய திருவள்ளுவரின் தொலைநோக்குப் பார்வைக்குத் தக்க சான்றாக உள்ளமையை உணர முடிகின்றது.

நன்றி: முனைவர் பா.தாமோதரன்
திருக்குறள் கூறும் சட்டம், [பக்.113]

8.9.3.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை [குறள்.583]
அறிபொருள்:
நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதை ஆள்வோர் உறுதி செய்தல்

8.9.4.நாடு என்ப நாடா வளத்தன [குறள்.739]
அறியப்படுபொருள்:
மக்களுக்கு இன்றியமையாத அனைத்தையும் தன்னிடத்தே இடுக்கும்படி ஆக்கிக்கொள்ளும் நாட்டு வாழ்வு

8.9.5.பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க்
காண்பர் [குறள்.1034]
அறிபொருள்:
பன்னாட்டு ஆட்சிகளையும் தமது உழவாட்சியின்கீழ்க் கொண்டுவரும் உழவுத் தொழில் செய்தல்

8.9.6.நாட்டு அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:

1. குடிகளைக் காக்கும் நல்ல ஆட்சி
2. கடுமையாகத் தண்டித்தல் போலக் காட்டி இறுதியில் மென் மையாகத் தண்டித்தல்
3. நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதை ஆள்வோர் உறுதி செய்தல்
4. மக்களுக்கு இன்றியமையாத அனைத்தையும் தன்னிடத்தே இருக்கும்படி ஆக்கிக்கொள்ளும் நாட்டு வாழ்வு
5. பன்னாட்டு ஆட்சிகளையும் தமது- உழவாட்சியின் கீழ்க் கொண்டுவரும் உழவுத் தொழில் செய்தல்

9.0.0.நிறைவுரை:

தனிமனிதர் முதல் உலக நாடுகளில் வாழும் பெரும் தலைவர்கள்வரை இடையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மன அமைதி மிகவும் இன்றியமையாதது என்பதைப் பல்வேறு கருத்தியல்கள் தெளிவாகத் தெரிவித்தன.

மனஅமைதியும் அதனால், உருவாகும் புறஅமைதியும் பற்றி அறிந்தோம். மனஅமைதியும் புறஅமைதியும் உருவாக எண்ணம், சொல், செயல் அளவில் எவற்றையெல்லாம் கடைப்பிடியாகக் கொள்ள வேண்டும் என்பதையும் உலகு தழுவிய சிந்தனைச் சிற்பி திருவள்ளுவர், திருக்குறளில் சிறப்புறவும் அருமையாகவும் அழகாகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் திட்பமாகவும் பதிவு செய் துள்ளார். இங்குச் சில சான்றுகளே கொடுக்கப்பட்டுள்ளன. மற்றவற்றை முப்பாலில் கற்றுணர்க..

அவற்றை அறிபொருளாகவும் அறியப்படுபொருளாகவும் அவர் பதிவு செய்துள்ளார். அவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்புதல் வேண்டும்.

அவற்றை அந்த அந்த நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து உலகு அறியச் செய்தால், அங்கு இங்கு எனாதபடி மனஅமைதி, புறஅமைதியும் எங்கும் அரும்பும்; மலரும்; வளரும். திருக்குறளும் உலகு எல்லாம் பரவும்; நாமும் பெருமையும் பெருமிதமும் பெற லாம்; நமக்கு உலக உறவும் அமையும்.

பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502


000000000000000000000000000000000000000000000000000000000


10.0.0.துணைநூல் பட்டியல்

10.1.0.பா.தாமோதரன் முனைவர், திருக்குறள் கூறும்
சட்டம், வெளீயீடு: மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர்
தெரு, பாரிமுனை, சென்னை — 600 108.

10.2.0.சொ.பத்மநாபன் கவிஞர்,  கவிதை இன்பம்,
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை — 600 108.

11.0.0.துணை நின்ற இணைய வலைத் தளம்

11.1.0.விக்கிப்பீடியா, கூகுள், இணைய வலைத் தளம்


12.0.0.பார்வை நூல்கள்

12.1.0.வெ.அரங்கராசன் பேராசிரியர், அறுசொல் உரை,
மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை – 600 108.

12.2.0.வெ.அரங்கராசன் பேராசிரியர், முப்பால் – சொற்பிரிப்
புடன், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை,
சென்னை — 600 108.

12.3.0.வெ.இராமலிங்கனார், திருக்குறள் நாமக்கல் கவிஞர் உரை,
பழனியப்பா பிரதர்சு, சென்னை – 600 014

12.4.0. இரா.இளங்குமரனார், திருக்குறள் [நம் மறை] வாழ்வியல் உரை, மறுபதிப்பு, 2003, தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017

12.5.0.செகவீர பாண்டியனார் கவிராச பண்டிதர், திருக்குறட்
குமரேச வெண்பா, தமிழ் நிலையம், 40, சரோசினி தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.

12.6.0.குழந்தை புலவர்., திருக்குறள் குழந்தை உரை,
சாரதா பதிப்பகம். 3,கிருட்டிணாபுரம் தெரு, இராயப்பேட்டை, சென்னை- 600 014.

12.7.0.ச.தண்டபாணி தேசிகர் மகாவித்துவான்,  திருக்குறள் உரைக் களஞ்சியம், இரண்டாம் பதிப்பு, 2006, பதிப்புத் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர், மதுரை – 625 021

12.8.0. ஞா.தேவநேயப் பாவாணர் பேராசிரியர்,  தமிழ் மரபுரை, செம்பதிப்பு, 2007, சிறீ இந்து பப்ளிகேசன்சு, 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு, [உசுமான் சாலை] தியாகராய நகர், சென்னை- 600 017.
12.9.0.வ.சுப.மாணிக்கனார், திருக்குறள் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை- 600 108.

12.10.0.கு.மோகனராசு பேராசிரியர் முனைவர், திருக்குறள் மக்கள் உரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.