தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது!
தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில்
இசைக்கலை வளமுற்றிருந்தது!
கருநாடக இசை தமிழிசையின் ஒரு கிளையே அல்லது திரிபேயாகும். தெலுங்கு நாட்டில் என்றுமே அது காணப்படாதது மட்டுன்று, தெலுங்கு மொழியின் பெயர், வரலாற்றில் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் அதன் அரங்குகளும் அதன் முழு இசையியக்கமும் சிறந்து விளங்கின. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும் கலை உயர்வையும் கலையின் பழமையையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்நூலுக்கு உரை வகுத்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் … … காலத்திலும் சிலப்பதிகாரத்திற்கு உதவியாகவிருந்த இசையிலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் இருந்தன என்று அறிய முடிகிறது. … … … இராவணன் … இறைவன் மகிழுமாறு ஆயிரம் நரம்புடைய யாழ் பயின்றான். … …. … பின்னர் எழுந்த தேவாரப் பதிகங்களுக்குப் பண் வகுத்து திருக்கோயில்களில் அவற்றைப் பாடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது சோழ மன்னர் காலத்திலாகும்.
சோழ மன்னர்களில் ஒருவன் இசை பயில்வதற்கான குறியீடுகளை சுரங்களை வகுத்து ஒழுங்குபடுத்தினான் என்று கலிங்கத்துப் பரணியில் கூறப்படுகின்றது. இதற்கு நெடுநாள் முன்னர் முதலிரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவ மன்னன் ஒருவனுடைய கல்வெட்டிலும் இதே வகையில் சுரங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இக்காலங்களிலெல்லாம் தெலுங்கு நாட்டிலோ, தெலுங்கு மொழியிலோ கருநாடக இசை தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கூறியன, தெலுங்கு தோற்றம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்த உண்மையினை நன்கு காட்டுவனவாகும்.
- புலவர் செந்துறைமுத்து:
- திருமுறையும் தமிழிசையும்:
- பக்கம் 17-19
கருநாடக இசை என்றாலே தெலுங்கு இசைதான் எனப் பிதற்றுபவர்களுக்குச் செம்மையான அடி இது!