(தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 தொடர்ச்சி)

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3

 இந்த ஆய்வு  பயிற்சி ஆசிரியர்கள் தேவையான விவரங்களைப் பெற்றுக் கற்பித்தலில்,  தொலைத்தகவல்பயன்பாட்டினை வளர்த்துக் கொள்ள உதவியது

மலேசியக் கல்வியில் தொலைத்தகவல்

    21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் படிநிலை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத்தகவல். இதுவானது தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது. கல்வித் துறையிலும் இதன் பயன்பாடு அளப்பரிய சேவையாற்றுகின்றது. மலேசியக் கல்விக் கொள்கைகளில் இதன் பயன்பாடு பல வடிவங்களில் செயலாக்கம்முதன்மை காண்கிறது. அவற்றுள் முதன்மையானது

மி.- புத்ததம்

  கணிணி மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் புத்தகங்கள். இதில் புத்தகத் தகவல்கள் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறைய புத்தகங்களை வாங்கத் தேவையில்லை.

மி.- கற்றல்

  இணைய மூலமாகக் கற்றலில் நடத்தப்படும் நடவடிக்கையாகும். இதில் பாடங்களையும் அதற்கான தேர்வு முறைகளையும் வகுத்திருப்பார்கள். இந்தக் கற்றலில் கல்விக் கணியன்களின் (மென்பொருள்களின்) பயன்பாடு அதிகம்.

மி. –  நூலகம்

  நூலகத்திலிருந்து தேவையான தகவல்களை இணையப் பயன்பாட்டின் மூலம் அறிய இது உதவுகிறது. உலகில் எந்தப் பகுதியிலிருந்தும் நூலகத்தின் வழி, தகவல்களைப் பெறலாம்.

காணொளி வழித்தொலை உரையாடல்:

கல்வித் தொடர்புடையவர்களை இதன் மூலம் அறியலாம்.

நமக்குத் தேவையான தகவல்களை அவர்களிடம் கேட்டோ பரிமாறியோ கொள்ளளாம். இதன்வழி,  கல்வி தொடர்புடைய தன்னம்பிக்கையும் ஒற்றுமையும் வளர்கின்றன.

  தமிழ்ப்பள்ளி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் தொலைத்தகவல் பயன்பாடு இருந்தாலும் அவற்றின் முதன்மைத்துவத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் குறைவான எண்ணிக்கை யிலேயே அறிந்து பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்பள்ளி தொலைத்தகவல் பயன்பாடு மெய்நிகர் கற்றல் அடிப்படையிலேயே பெரும்பாலான பள்ளிகளில் நடைபெறுகின்றது. மேலும் சில குறைவான பயன்பாடுகளான மி.-அட்டை, மி.-நூல் போன்றவையும் நடைமுறையில் உள்ளன.

வாகனத் தொலைத்தகவல் (Vehicle Telematics)

  தொலைத்தகவல்பயன்பாடு வாகனங்களில் முதன்மைத் தகவல்களைச் சேமிக்க உதவுகிறது. அதாவது வாகனத்தின் முழு இயக்கத்தையும் அதன் தொடர்பு-தகவல்களையும் ஒரு சேர இணைக்கிறது. அதே சமயத்தில் ஓட்டுநர் உதவிச் சிறப்பு முறைமைத் திரள் (cloud adas)  வழியாக ஆபத்தான வாகன ஓட்டுநர்களை அடையாளங்காண உதவுகிறது. இந்த ஓ.உ.சி.மு. திரள்(cloud adas), எச்சரிக்கைகள், காணொலிகள்,  ஒளிப்படங்கள் ஆகியவற்றை அடக்கும். ஆசியாவில் புகழ் பெற்ற முன்னணித் தொலைத்தகவல் சேவை வழங்குநராக இந்தியாவின் வழிஇணைப்பு(CHAINWAYTSP)  விளங்குகிறது. இது (CHAINWAYTSP OBD Plus Solution மூலம்) வாகனப் பாதுகாப்பற்ற முறைகளை நீக்குகிறது. இதோடு மட்டுமல்லாமல் வாகனங்களில் புவியிடங்காட்டி(GPS), இலவசத் தொலைபேசி அழைப்புகள், தொலைக்காட்சி இணைப்பு, ஊர்தித்திறவு உதவி ஆகியனவும் தொலைத்தகவல் பயன்பாட்டிற்கு வித்திடுகின்றன.

காப்புறுதித் தொலைத்தகவல்  (Insurance Telematics)

     காப்புறுதி என்பது விபத்தால் வாகனத்திற்கோ அதனைச் செலுத்திய மனிதனுக்கோ ஆபத்து ஏற்படும் போது வழங்கப்படும் பாதுகாப்பாகும். இதற்குக் காப்புறுதி நிறுவனம் நல்ல பண வலிமையைக் கொண்டிருக்க வேண்டும்.

 தேவையில்லாத காப்புறுதி: பண விரயத்தைக் தடுக்க காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதி தொலைத்தகவல்  மூலம் தத்தம் பண விரயத்தைக் குறைத்துக் கொள்கின்றன. எ.கா; பேருந்துகளில் கருப்புப் பெட்டி என்ற கருவியைக் கொண்டு வாகன கட்டுப்பாட்டைக் கவனிக்கலாம். இப்பெட்டி பேருந்தின் வேகக் கட்டுப்பாடு, பயண தூரம், சாலை வகை, பயண நேரம், பேருந்து ஓட்டும் முறை ஆகியவற்றைப் பதிவு செய்யும். மலேசியாவில் பிப்பிரவரி 1, 2016 முதல் பேருந்துகளில் இந்தக் கருப்புப்பெட்டியானது கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற கொள்கையை மலேசியப் பள்ளிப் பேருந்து சங்கம் ஏற்க மறுத்துள்ளது. இக்கூற்றானது புதிய தொலைத்தகவல் பொருளை வணிகம் பேசவே தொலைத்தகவல் காப்புறுதி எண்ணம் கொண்டுள்ளதை விவரிக்கிறது (தி சன், 2016)

(தொடரும்)

பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் ஆண்டு)

(Pehrarsi Muthukumar)

 மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி 32000 சித்தியாவான், பேராக்கு.