தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 3/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
[தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 2/3 தொடர்ச்சி]
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 3/3
நல்வாழ்வுத் தொலைத்தகவல் (Health Telematics)
இது மனிதனின் உடல் நலத்தைப் பேண உதவுகிறது. பொதுவாகத் தொலைமருத்துவம் அல்லது தொலை நல்வாழ்வு (tele-medicine or tele-health) எனவும் அழைக்கப்படுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல், நல்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல் நுட்பத்தின் மூலம் உடல் எடை, மனித நல்வாழ்வு, குழந்தைப் பேறு போன்றவற்றை முறையாகக் கையாளலாம். மேலும் தொலைவிலுள்ள நல்வாழ்வுத் தகவல்கள், மருத்துவ வளர்ச்சி ஆகியனவற்றை அறிந்து பயன் பெறலாம். ஆகவே நல்வாழ்வுத் தொலைத்தகவல் நலமான மன்பதை மாற்றத்திற்கு இருபத்தோராம் நூற்றாண்டின் ஆற்றல் வாய்ந்த கருவியாகத் திகழ்கிறது.
மனிதநேயத் தொலைத்தகவல்(Human Tele-matic)
இப்பிரிவில் திறன் இல்லம், மி-நலம் போன்றன முதன்மை வாய்ந்தனவாக அமைகின்றன. மனித குலத்தைக் காக்கும் கடவுளாக மனிதநேயத் தொலைத்தகவல் வலம் வருகின்றது. ஆகவே மனித நேயத்தின் இன்றியமையாமையைத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் காக்கிறது தொலைத்தகவலியல்.. இதற்காக விருதுகளும் வழங்கி பாராட்டப்படுகின்றன. இதில் பெர்லின், 2017 விருதைக் கூறலாம். இவ்விருது 2017 செப்டம்பர் 1 முதல் 6 வரை செருமனியின் பெர்லினில் வழங்கப்படுகிறது (IFA, Human Telematic Award, Berlin, 2017).
குமுகாயத் தொலைத்தகவல் (Social Tele-matic)
குமுகாயத் தொடரில் மனிதர்களுக்கு முதன்மைப் பங்குள்ளது. மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இம்மதிப்பினை தகவல் தொழில்நுட்ப வகையில் பறைசாற்றுவதே குமுகாயத் தொலைத்தகவல் பயன்பாடாகும். வேலையிடங்களில் குறிப்பாக ஓட்டுநராக இருந்தால் அவரின் சேவையை மதித்து பாராட்டுகள் வழங்க வேண்டும். வாகன ஓட்டுநர் சிறந்த முறையில் வாகனம் ஓட்டுவது, நன்னடத்தையைக் கொண்டிருப்பது ஆகியன சிறந்த சேவையில் அடங்கும். பணியாளர்களுக்கு முதலாளிமார்கள் போட்டிகள், தக்க பரிசூதியம் ஆகியனவற்றையும் ஏற்படுத்தலாம். இந்நடவடிக்கையினால் வேலையாட்களுக்கும் முதலாளிமார்களுக்கும் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். வேலையாட்களின் கவனிப்பு அவர்களைச் சீரிய முறையில் பணியை மேற்கொள்ள வழி வகுக்கும். எ.கா: வாகன ஓட்டுநர் வாகன எரிவாயுவைச் சிக்கனப்படுத்திச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகும். எனவே மனிதர்களுக்குச் மன்பதையுணர்வு மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.
உலகளாவிய தொலைத்தகவல் நிறுவனங்கள்
உலகளாவிய வணிகத் தொலைத்தகவல் 2016-2020) (Global Commercial Telematics Report (2016 – 2020) அறிக்கையின்படி உலக அரங்கில் தொலைத்தகவல் தொழில்நுட்பம் பல நிறுவனங்களில் தோற்றுவிக்க முயற்சிகள் ஆங்காங்கே கலங்கரை விளக்குபோல வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகழின் உச்சியில் வீற்றிருப்பது என்னவோ 10 நிறுவனங்கள் மட்டுமே. அவற்றுள் முதல் சிறந்த நிறுவனமாக ஏர்ஐகியூ(AirIQ) திகழ்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா, கனடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. [இதனைத் தொடர்ந்து Fleetmatics, mix I TELEMATICS (1996), TomTom (1991), Trimble (35 வருடங்கள்), Actsoft (1999), ctrack, FLEET BOARD (2010), KORE, masternaut. ]இந்தியாவிலோ முதல் 10 தொலைத்தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக (GPS) Traccar, Starcom, sahaj GPS Tracker, ATTIGPS, Road Point, Azuga, IndTrack, Apex Telesoft, Autocop, Asset GPS Tracking System உள்ளன (WLivenews, 2017). மலேசியாவில் CAPTOR 2017 நிறுவனம் “ தொலைத்தகவல்” சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். உலகில் வாகனங்கள் திருடு போகும் நாடுகளில் மலேசியா 10 ஆவது இடத்தில் உள்ளது (தி ஃச்டார், 2015).
எதிர்காலத் தொலைத்தகவல் சேவைகள்
உலக நாடுகளில் எதிர்கால தொலைத்தகவல் தொழில்நுட்பம் பல வடிவங்களில் வேரூன்றியிருக்கும். அவை முறையே வலைமம் (network), ஒளிசார் வலைமம் (optical network), மெய்நிகராக்க வலைமம் (virtual network), ஒருங்கிணைந்த வலைமக் கட்டமைப்புகள் (Integrated network configurations), இணைய நெறிமுறை சேவை (IP service), வலைமக் குறியீடு (network coding), மேலடுக்கு வலைமம் (Overlay network), ச-ச பிணையம் (P2P networking), திரள் கணிமம் (cloud computing). இந்த எதிர்கால தொலைத்தகவல் சேவைகளே உலக நாடுகளின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வரையறுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழும். இக்கூற்று என் மலையகமான மலேசியத் திருநாட்டையும் உள்ளடக்கும்.
தொலைத்தகவலில் என் பட்டறிவு
என் பள்ளிப் பட்டறிவில் தொலைத்தகவல் பயன்பாடு சில வகைகளிலே அறியப்பெற்றேன். அவை முறையே மி.-புத்தகம், மி.-கற்றல், மி.-நூலகம். மி.புத்தகப் பயன்பாட்டைப் பள்ளி ஆசிரியரின் மூலம் பாடக் கற்றலில் அறிந்தேன். இதன் மூலம் எனக்குத் தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பேன். இதன் விளைவாக நிறைய புத்தகங்களைப் படித்துத் தகவல்களை அறிந்து கொண்ட மாணவி என்று பள்ளி அளவில் பரிசு வழங்கப்பட்டது.
மி.-கற்றல் வழி எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. அஃதாவது மெய்நிகர் கற்றல் வழி பாடத்தையறிந்து ஆசிரியரோடும் மற்ற மாணவர்களோடும் கலந்துரையாடி கற்றலில் ஈடுபட்டேன். சில வேளைகளில் மி.- கற்றல் வழி பெறப்பட்டுச் சேமித்து வைத்துள்ள தகவல்களை இணைய வசதி இல்லாத நேரத்திலும் பயன்படுத்தினேன். மி.-நூலகப் பயன்பாட்டிலும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் மூலம் நிறைய புத்தகங்களை நேரடியாகவும் பதிவிறக்கம் செய்தும் வாசித்து மகிழ்வேன்.
என் கற்றலில் தொலைத்தகவல் நன்மைகள் பல. அதில் குறிப்பிடத்தக்கது என் எதிர்கால இலட்சியமான அறியலாளர் என்ற நோக்கத்தை அடைய இஃது உறுதுணையாக இருக்கிறது. மேலும் நிறைய தகவல்களை உலக வளர்ச்சிக்கேற்ப அறிய தொலைத்தகவல் பயன்பாடு எனக்கு அரிய அருட்கொடையாக அமைந்துள்ளது.
முடிவுரை
தொலைத்தகவல் எனும் அறிவியல் மின்கம்பி இணைப்புத் தகவல் தொழில் நுட்பம் வருங்கால தலைமுறையினருக்குத் தகவல் இணைப்புப் பாலமாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. மலேசியாவில் இம்மாநாடு மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் சூலை 2018 இல் நடைபெறும் (IEEE,2018). இந்த மாநாட்டின் பகிர்வுகள் மலேசிய நாட்டின் “தொலைத்தகவல்” வளர்ச்சிக்கு குறிக்கல்லாக (milestone)விளங்கும். பொருட்பாலில் 684 ஆவது குறளான
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
புதுமை உலகத் தூதுவனாகத் தொலைத்தகவல் தொழில் நுட்பத்தை வள்ளுவர் இப்படிப் பகர்கின்றார். அஃதாவது இயற்கையான அறிவியல் தொழில் நுட்ப அறிவைக் கொண்டு கவர்ந்திழுக்கும் கருவி அமைப்பைப் பெற்று ஆராய்ச்சியால் தொழில் நுட்பக் கல்வியறிவை மனிதர்களுக்குத் தூது விடும் என்கிறார். இறுதியாக
முடியும்!
உன்னாலும் முடியும்!
முடிவெடு!
திட்டமிடு!
செயல்படு!
இடைவிடாது செயல்படு!
தொடர்ந்து செயல்படு!
முடியும்!
உறுதியாக
உன்னாலும் முடியும்!
.
பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் ஆண்டு)
(Pehrarsi Muthukumar)
மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி 32000 சித்தியாவான், பேராக்கு.
மேற்கோள்கள்
- உலகத் தமிழ் இணைய மாநாடு (2017). மலேசியா.
- கங்காதரன்.சி. (2017). தமிழில் புதுத்தடங்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.
- திருக்குறள்.
- தி சன், 28-1-2016.
- தி ஃச்டார், 2015.
- CAPTOR (2017). Telematics.com Retail Sdn Bhd.
- CHAINWAY TSP Telematics Service Provider (2017). Guangdong, China.
- Global Commercial Telematics Report (2016 – 2020). Top 10 Global Commercial Telematics Companies, Technavio, UK.
- IEEE (2018). TAFGEN. 2ND International Conference In Telematics and Future Generation Works Net.
- Niki Davis & Dominic Prosser (1999). Telematics for Teacher Training Project. Final Report. ERIC.
- telematics technology – Dogpile Web Search.html
- WLivenews (2017). Top 10 Best GPS Tracking Systems Offering Companies in India.
Leave a Reply