(தோழர் தியாகு எழுதுகிறார்  146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை தொடர்ச்சி)

வேண்டும் உரோகித்து சட்டம்!

இனிய அன்பர்களே!

தொடர்ந்து உரோகித்து வேமுலா குறித்து எழுதிக் கொண்டிருந்தேன். மீயுயர் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான ‘உரோகித்து வேமுலா (VEMUOLA) சட்டம்’ இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுப்பப்பட்டது .

நான்கைந்து ஆண்டு முன்பு புதுவை பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது உரோகித்து வேமுலா குறித்துப் பேசியதோடு உரோகித்து வேமுலா சட்டத்தின் தேவை பற்றியும் பேசினேன்.

இன்று காலை நாளேடுகளில் வந்துள்ள ஒரு செய்தி உரோகித்து வேமுலா பேரில் சட்டம் இயற்றும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளது. இந்தக் கோரிக்கை எதிர்பாராத ஓரிடத்திலிருந்து வந்திருப்பது இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாலையில் தோழர் அரி பரந்தாமன் அழைத்துச் சொன்னார்: “காங்கிரசு பேரவைக் கூட்டத் தீர்மானங்கள் எல்லா நாளேடுகளிலும் வந்துள்ளன. பாருங்கள்.” உடனே இந்துவைப் புரட்டினேன்.

“Rohit Vemula Act, quota in higher judiciary in Cong. promises for social justice” என்ற தலைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

மெய்யாலுமே நல்ல செய்திங்கோ! மாறி வரும் காலத்தின் அறிகுறிகள்! நாளை விரிவாகப் பேசுவோம்!

 தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113