(தோழர் தியாகு எழுதுகிறார் 59 தொடர்ச்சி)

அன்பர் டி. சீனிவாசன் எழுதுகிறார்:

தாழி மடலுக்கு மிக்க நன்றி ஐயா.

அவற்றை ஒரு வலைப்பதிவில் பதிவு செய்து வருமாறு வேண்டுகிறேன்.

பெரும் பெட்டகமாக இருக்கும்.

நுட்ப உதவிகள் வேண்டுமெனில் செய்து தர இயலும்.

உங்கள் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் படைப்புப் பொது உரிமையில் (கிரியேட்டிவ் காமன்சு உரிமையில்) பகிர்ந்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பெயரிலேயே அன்பு வைத்துள்ள அன்பர் அன்பரசு மாரி எழுதுகிறார்:

தங்களது தாழி மடல் கிடைக்கப்பெற்றேன்… மிக்க மகிழ்ச்சி! தங்களது பணி தொடர எனது வாழ்த்துகள்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் என்று நேற்றைய மடலில் நான் எழுதிய விளக்கத்துக்கு மறுமொழியாக அன்பர் சிபி எழுதுகின்றார்:

ஆம், இளைஞன் தான்! என் கருத்து மீதான தங்களின் மதிப்பீட்டிற்கு நன்றி! 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிய அன்பர்களே!

Ø  தாழிக்கு நீங்கள் தெரிவித்துள்ள அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி! செய்நுட்ப உதவிகள் தேவையா? தேவைதான். தாழி அணி கவனத்திற்கொள்ளும்.

Ø  காலப் போக்கில் தேவையைப் பொறுத்து தாழியில் புதுப் புது பகுதிகள் சேர்க்கப்படும். மடல் பல்லிதழ் மலராகப் பூக்க வேண்டும் என விரும்புகிறோம்.

Ø  அவரவரும் தேர்ந்து தெளிந்து தேவை என்று கருதக் கூடியவற்றை மட்டும் படித்துக் கொள்ளலாம். படிப்பதோடு எழுதவும் செய்யலாம். அறிவுப் பரிமாற்றம் ஒருவழிப் பாதையன்று. அது இருவழிப் பாதை கூட இல்லை. பல்வழிப் பாதையாக இருந்தால்தான் இன்றைய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க இயலும்.

Ø  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில்தான் தாழி மடல் விரிகிறது. ஆனால் இது கமுக்க மடல் அன்று. இதனைப் பரவலாகக் கொண்டுசேர்க்கும் பொறுப்பு இதனை மின்னஞ்சல் உள்பெட்டியில் பெற்றுப் படிக்கிற அனைவர்க்கும் உண்டு. ஆர்வமுள்ளவர்களிடம் மின்னஞ்சல் முகவரி பெற்று 90258 70613 புலனத்துக்கு அனுப்பி வையுங்கள். தாழி மடல் மின்னஞ்சல் முகவரிக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

Ø  புதிய அன்பர்களுக்குப் புதிய மடல் அனுப்புவதோடு பழைய மடல்கள் தேவை என்றாலும் அனுப்பி வைப்போம். பழைய மடல் பெறுவோருக்கு ஏதாவது மடல் கிடைக்காமற்போயிருந்தால் எழுதுங்கள், அனுப்பி வைக்கிறோம்.

Ø  முதல் மடல் தொடங்கி இந்த மடல் வரை பெறும் அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்: நீங்கள் ஒருமுறை கூட தாழி மடலுக்கு ஒரு விடை மடல் விடுத்ததில்லை என்றால் இப்போது அதைச் செய்யுங்கள். தாழி அணிக்கு நன்றி செய்ததாக அஃதமையும்.

Ø  நல்ல விதையென்றால் விளைந்து வர வேண்டும், இல்லையென்றால் மண்ணில் எருவாக வேண்டும்.

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 37