தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் 70 தொடர்ச்சி)
இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு
(BASIC STRUCTURE OF THE INDIAN CONSTITUTION)
என்றால் என்ன?
பொ,ந.பி [EWS] தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய இரு நீதியரில் ஒருவரான இரவீந்திர பட்டு எழுதிய தீர்ப்புரையைத் தமிழாக்கம் செய்து வருகிறேன். அதன் மூன்று பகுதிகளைச் சட்டத் தெளிவு கருதியும் தமிழாக்கம் கருதியும் முன்பு தாழி மடல்களில் (37, 38, 40) பகிர்ந்திருந்தேன், இதோ இன்னும் சில பகுதிகள் (தமிழிலும் ஆங்கிலத்திலும்):
[எம். நாகராசு வழக்குத் தீர்ப்பிலிருந்து சில எடுகோள்கள்:]
“கூட்டாட்சியம், சமயச் சார்பின்மை, அறிவுக்குகந்த தன்மை, குமுகியம் (சோசலிசம்) போன்ற கொள்கைகள் ஒரு குறிப்பான வழிவகையின் சொற்களுக்கு அப்பாற்பட்டவையா என்பதையே முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இந்தக் கொள்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு வழிவகைகளுக்கும் அடிநாதமாக விளங்கி, அவற்றை இணைக்கும் படியானவை…. அரசமைப்பை முழுமையான உயிரமைப்பு ஆக்கக் கூடியவை. ஆனால் வெளிப்படையாக விதிகளின் வடிவில் வெளிப்படுத்தப்படுகிறவை அல்ல.”
[“The point which is important to be noted is that principles of federalism, secularism, reasonableness and socialism, etc. are beyond the words of a particular provision. They are systematic and structural principles underlying and connecting various provisions of the Constitution. They give coherence to the Constitution. They make the Constitution an organic whole. They are part of constitutional law even if they are not expressly stated in the form of rules.” ]
“ஆக, அடிப்படைக் கட்டமைப்பு என்ற கருத்தாக்கம் நாடாளுமன்றத்தின் சட்டத்திருத்த அதிகாரத்துக்கு வரம்பிடுகிறது. சுருங்கச் சொல்லின், ஒரு கொள்கை அடிப்படைக் கூறாகத் தகுதி பெற வேண்டுமானால், முதலில் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி என்றும், அந்த வகையில் சட்ட மன்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதென்றும் நிறுவப்பெற வேண்டும். பிறகுதான் அது நாடாளுமன்றத்தின் சட்டத் திருத்த அதிகாரத்தையும் கூட கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு அடிப்படையானதா என்பதை ஆராய முடியும். அடிப்படைக் கட்டமைப்பின் கோணத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நீதித்துறை மீளாய்வு செய்யும் அளவை இதுவே ஆகும்.”
[“The basic structure concept accordingly limits the amending power of Parliament. To sum up: in order to qualify as an essential feature, a principle is to be first established as part of the constitutional law and as such binding on the legislature. Only then, can it be examined whether it is so fundamental as to bind even the amending power of Parliament i.e. to form part of the basic structure of the Constitution. This is the standard of judicial review of constitutional amendments in the context of the doctrine of basic structure.”}
இந்திய அரசமைப்பில் “கூட்டாட்சியம்” என்ற சொல்லே முகப்புரையில் காணப்படவில்லை. ஆனால் கூட்டாட்சியக் கொள்கை (அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருப்பது போன்ற கண்டிப்பான பொருளில் அல்ல) அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு வழிவகைகள் மீதும் படர்ந்துள்ளது. 245, 246 ஆகிய உறுப்புகளை ஏழாம் அட்டவணையில் காணப்படும் அதிகாரப் பிரிவினையுடன் இணைத்துப் பார்த்தால் இந்தக் கருத்தாக்கத்தைக் கண்டுகொள்ள முடியும்.
[“Under the Indian Constitution the word “federalism” does not exist in the Preamble. However, its principle (not in the strict sense as in USA) is delineated over various provisions of the Constitution. In particular, onefinds this concept in separation of powers under Articles 245 and 246 read with the three lists in the Seventh Schedule to the Constitution.]
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 43
Leave a Reply