தலைப்பு-நகர்மக்கள்,மொழிக்கலப்பு : thalaippu_nakarmakkal_mozhikalappu

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர்

  எல்லாத் தேயங்களிலும் பாச் செய்யுட்கள் வாயிலாகவும் நாட்டுப்புறத்தாருடைய பேச்சு வழக்கு வாயிலாகவும் மொழியின் பண்டைய நிலை அறியப்படும். தொலைவில் உள்ள நாட்டுப்புறங்களில் வாழும் தாழ்ந்த வகுப்பு மக்களுடைய தமிழ்ப் பேச்சு, சமற்கிருதத்தினின்று வந்த சொற்களை ஆளாதிருக்கும் வகையில் பழந்தமிழைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.

  இதன் உண்மை கல்லைச் “சிலை’ என்றும், மலையை “அசலம்’ என்றும் மரத்தை “விருட்சம்’ என்றும் பூவை “புட்பம்’ என்றும் வழங்காத நாட்டுப்புறப் பேச்சு வழக்கால் அறியத்தகும்.

  பொழுதினைச் “சமயம்’ என்பாரும் பெயரினை”நாமம்’ என்பாரும் அம்பினைப் “பாணம்’ என்பாரும், எலும்பினை “அசுதி’ என்பாரும் நகரில் வாழுந் தமிழரேயாவர்; நாட்டுப்புறங்களில் வாழுந் தமிழரல்லர்.

  பாம்பினைச் “சர்ப்பம்’ என்றும், தலையினைச் “சிரசு’ என்றும் பல்லினைத் “தந்தம்’ என்றும் வடமொழிப் பெயரால் வழங்குவோர் பெரும்பாலும் நகர்வாழ்மக்களே.

செந்தமிழ்க்காவலர் அ.சிதம்பரனார்: தமிழோசை: பக்கம்.23