இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக!  “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . . . . . . . எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம். “சுகர் பேசண்ட்சு”  “முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு”  “முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”,  “முளைத்த மேத்தி…

தமிழக வரலாறு  5/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு  5/5  மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…

தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்?   எல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து  கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா? இல்லையே! தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை.   நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால்  தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம்…

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர் – அ.சிதம்பரனார்

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர்   எல்லாத் தேயங்களிலும் பாச் செய்யுட்கள் வாயிலாகவும் நாட்டுப்புறத்தாருடைய பேச்சு வழக்கு வாயிலாகவும் மொழியின் பண்டைய நிலை அறியப்படும். தொலைவில் உள்ள நாட்டுப்புறங்களில் வாழும் தாழ்ந்த வகுப்பு மக்களுடைய தமிழ்ப் பேச்சு, சமற்கிருதத்தினின்று வந்த சொற்களை ஆளாதிருக்கும் வகையில் பழந்தமிழைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.   இதன் உண்மை கல்லைச் “சிலை’ என்றும், மலையை “அசலம்’ என்றும் மரத்தை “விருட்சம்’ என்றும் பூவை “புட்பம்’ என்றும் வழங்காத நாட்டுப்புறப் பேச்சு வழக்கால் அறியத்தகும்.   பொழுதினைச் “சமயம்’ என்பாரும் பெயரினை”நாமம்’…

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3   தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.   வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு  2/3   தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார். எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்….

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 1/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு     தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது, மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், “தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன்” என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும், சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,…