பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்! – வி.கனகசபை
பண்டைத் தமிழிலக்கியம் பேரளவினது; முன்முறையினது
பண்டைத் தமிழிலக்கியம் அகல்பெரும் பரப்புடையது. அதே சமயம் அது முன்னால் வேறு எவர் காலடியும் படாத ஒரு புதுநிலப்பரப்புப் போன்ற இயல்புடையதாகவும் இலங்குகிறது.
– அறிஞர் வி.கனகசபை: 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்: பக்கம். 8:
மொழிபெயர்ப்பு: பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
உயர்நாகரிகமும் செல்வ வளமும் மிகுந்திருந்தமையால்
பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்!
பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளை யான் கூர்ந்து ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட கருத்து ஒன்றே ஒன்றுதான். அவற்றுள் ஒரு பெரும்பகுதி இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்பதில் சிறிதும் ஐயம் ஏற்பட வழி இல்லை. ஏனெனில் அவை இயற்றப்பட்ட காலத்தில் தமிழர் அராபியருடனும் கிரேக்கருடனும் உரோமருடனும் இவர்களை ஒத்த மற்ற அயல் நாட்டவருடனும் வாணிகத் தொடர்பு கொண்டு இவை காரணமாக உயர்நாகரிகமும் பெருஞ்செல்வ வளமும் உடையவர்களாய் இருந்தார்கள். அக்காலப் பொருளியல் வளத்தில் ஏற்பட்ட முன்னேற்றமே இலக்கியத் துறையிலும் தமிழருக்குப் பேரூக்கமும் தூண்டுதலும் தந்திருக்க வேண்டும் எனலாம்.
– அறிஞர் வி.கனகசபை: 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்: பக்கம்.910:
மொழிபெயர்ப்பு : பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
Leave a Reply