பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 தொடர்ச்சி)
05
நாடு காப்பாய்!
வீரம், வலிமை, துணிவு எல்லாம் எவற்றுக்காக? உலக உயிர்களின் துயர்துடைக்கவும் புவியைக் காக்கவுமதானே!
பாரதவீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவர் பலர் வாழ்ந்த பொன்னாடு (பக்கம் 23 / எங்கள்நாடு)
என்றும்
உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு(பக்கம் 45 / செந்தமிழ்நாடு)
என்றும் வீரம் நிறைந்த நாடு எனக் கூறுவதன் நோக்கம் என்ன?
எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச்
சுதந்தரம் பூண்டதுவாகி
இன்னுமோர் நாட்டின் சார்விலதாக்கிக்
கு டியரசு இயன்றதாய் இலக (பக்கம் 84 / மாசினியின் பிரதிருக்கினை)
எனத்தனியாட்சிக் குடியரசால் நாட்டை இலங்கச் செய்வதே ஆகும்.
எனவே, தேசத்தைக் காத்தல் செய்(ஆ.சூ. 49)
பூமியை இழந்திடேல் (ஆ.சூ.70)
போர்த்தொழில் பழகு (ஆ.சூ. 74) என்கிறார்.
மேலும், மண்ணாசைகொண்டு போர்த்தொழில்புரி எனப்பாரதியார் கூறவில்லை. நாட்டின் தற்காப்புக்குத் தேவை என்பதாகத்தான் (‘களவும் கற்று மற’ என்பதுபோல்) போர்த்தொழில் பழகு என்கிறார். மேலும், தனிமனிதத் தற்காப்பிற்கான கோல் கைக்கொண்டு வாழ் (ஆ.சூ.26) எனவும் கட்டளையிடுகிறார். மேலும்வீரரைப் போற்றினால்தான் நாடுகாக்கும்வீரர்களை் உருவாக முடியும்.எனவே, சூரரைப்போற்று (ஆ.சூ.30) என்கிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply