thamizhannai-thamizhthaay06

மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை

தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு!

  இனிமை நலங் கொழிக்கும் இன்பத் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைந்திருப்பது போன்று, எந்த மொழிக்கும் அமையவில்லை என்பது பன்மொழி அறிந்தார் திருந்திய கருத்தாகும். தமிழில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐவகை இலக்கணங்களுள் நடுவணதாகிய பொருள் இலக்கணம் எந்தப் பிறமொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புடையது.

  இது நாகரிகமிக்கத் தமிழர்தம் நல்வாழ்வு முறைகளை வகுத்துரைக்கின்றது. இங்ஙனம் மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு.

– திருக்குறள்மணி புலவர் அ.க.நவநீதகிருட்டிணன்