மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – வித்துவான். மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்
1-1-1899 என் தமிழாசிரியர் நாராயணசாமி(ப் பிள்ளை)யைத் திருவாரூர் சென்று கண்டேன். – மறைமலையடிகள்
மறை. திருநாவுக்கரசு விளக்கம்: இவர் நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வணிகம் நடத்திவந்தவர். கள்ளர் குலத்தோன்றலார்; வெ.நாராயண சாமி(ப்பிள்ளை), திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளையின்) மாணவராவர். இவர் சிறந்த இயற்றமிழாசிரியர். அடிகள் தமது இளமைப்பருவத்தே இவரையடுத்து இவர்பால் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச் செவ்வையாகக் கற்றுத் தேர்ந்தார்.
வித்துவான். மறை. திருநாவுக்கரசு
(மறைமலையடிகள் வரலாறு: பக்கம் 4).
நன்றி: குறள்நெறி, 01.02.1964
Leave a Reply