முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்
முதன் முதலாக
மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர்
இலக்குவனார்
மொழிப்போராளி பேராசிரியரி சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார்; மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார்; இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார்; வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் சங்கப்புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார்; புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார்; வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார்; வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார்.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டில் முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார். புதிய நெறியை உண்டாக்கியவர். தமிழ் வழியில் மாணவர் கற்க வேண்டுமென்ற நெறியைப் பரப்பியவர். தமிழ்ப் பயிற்றுமொழிக் கழகம் தோற்றுவித்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வழிக்கல்விக்கு ஆக்கம் தேடியவர் வள்ளுவர் நெறியே வையகத்திற்குச் சிறந்தது என்று ‘குறள்நெறி’ கூறி இதழ் நடத்தியுள்ளார்.
– உவமைக்கவிஞர் சுரதா (21.7.87)
Leave a Reply