thalaippu_valaimachorkal2

வலைமம் – Network

வலைமச் சொற்களில் சில வருமாறு :

தே.வா.வா..வலைமம்

நாசா என்பது  National Aeronautics and Space Administration  என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்திவான்வெளி பணியாட்சி  எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.. எனலாம். ஆதலின்தே.வா.வா..வலைமம்.

NASA communications network (nascom)
முனைப்பு மின் வலைமம் Active electric network
அகப்பரப்பு வலைமம்  / .. Local Area Network / LAN
அகல்பரப்பு வலைமம் / அக.. Wide Area Network / WAN
அகலக்கற்றைவலைமம் Broad band network
அழை  நிலை வலைமம் Dial-up networking
இணக்கவலைமம் Compromise network
இணை நோக்கு வலைமம் Peer- to- peer network
இணைக் குறுக்கு வலைமம் ( H-வடிவ வலைமம்) H network
இணைப்பிடை வலைமம் Inter connected network
இணைப்பிலி வலைமப் பணி  இ.இ.வ.ப. Connection less network service/ CLNS
இணைப்புசார் வலைமப் பணி / இ.சா.வ.ப. Connection oriented network service/ CONS
இணைவு நீக்கு  வலைமம் Decoupling network
இருபுற வலைமம் Bilateral network
இருமுனைய வலைமம் Two terminal network
இருமை வலைமம் Dual network
ஈடுசெய் வலைமம் Compensating network
உயர்மட்ட வலைமம் High-level network
ஒத்தியக்க வலைமம் Synchronous network
ஒப்புமை வலைமம் Analog network
ஒருங்கு பணிகளின் எண்ம வலைமம் Integrated services digital network (ISDN)
ஒருங்கு வலைமம் Integral network
ஒருமுக வலைமம் Linear network
கண்ணி வலைமம் Mesh network
கணிணி வலைமம் Computer networking
கல்வியிய வலைமம் Academic network
கலப்பின வலைமம் Hybrid network
கானகச் சூழலமைப்பு வலைமம்–கா.சூ. Forest ecosystem network-FEN
கிளைமை வலைமம் Star network
சமனி வலைமம் Bridgenetwork
சமனுறு வலைமம் Balanced network
செயற்கைவலைமம் Artificial network
ஞாலப்பரப்பு வலைமம்/ ஞாபவ Global area network / GAN
‘ட’ வடிவ வலைமம் L network
தகவல் வலைமம் Information network
தகவல்தொடர்பு வலைமம் Communication network
தன்னியக்க  எண்ம வலைமம் Automatic digital network
தனிப்படுத்து வலைமம் Isolation network
தனிப்பரப்பு வலைமம்/

...

Personal area network / PAN
திரள் மாறிலி வலைமம் Lumped-constant network
திருத்து வலைமம் Corrective network
நடுவண் வலைம அமைவம் Centralized network configuration
நான்முனை மின்வலைமம் Four terminal network
நுண்ணலைவலைமம் Microwave network
பகிர்வு வலைமம் Distributed network
பங்கிடு வலைமம் Dividing network
படிநிலை வலைமம் Hierarchical network
படிமுறை வலைமம் Ladder network
பல்திவலை வலைமம் Multi drop network
பல்துறை வலைமப் பகுப்பாய்வி Multiport network analyzer
பல்பெருக்க அணுக்க வலைமம் Multiple access network
பல்முறைமை வலைமம் Multisystem network
பல்வகை வலைமம் Heterogeneous network
பல்வரிசை வலைமம் Multitier network
பிரிப்பு வலைமம் Crossover network
பின்னல் வலைமம் Lattice network
பின்னூட்ட வலைமம் Feed back network
புறவெளிவலைமம்/ புவெவ Deep-space network (DSN)
பெருநகர்ப்பரப்பு வலைமம்/ பெ... Metro area network / MAN
பெரும வலைமம் Maximum network
பொருத்து வலைமம் Fixer network
மறுதலை வலைமம் Inverse network
முக்கோண வலைமம் Delta network
வலிகுன்று வலைமம் Attenuation network
கிளைப்பி வலைமம் Derivative network
வலு நீக்கு வலைமம் Deemphasis network
வலைம ஒருங்கமைப்பு Network organization
வலைம வரிவரை Network diagram
வலைம அட்டை Network card
வலைம இயக்க முறைமை Network operating system
வலைமஇயக்கக் கட்டுப்பாட்டு மையம்–வ.இ.க.மை. Network Operations Control Center (NOCC)
வலைம நிரல்படம் Network chart
வலைம மாறிலி Network constant
வலைம வரிப்படம் Network diagram
வலைமக் கட்டுமானம் Network architecture
வலைமச் சுற்றம் Network neighborhood
வலைமப் பகுப்பாய்வு Network analysis
வலைமப்பணியாட்சியர் Network administrator
வளாகப் பரப்பு வலைமம்  / ... Campus area network / CAN
விளம்பர வலைமம் Advertising Network

 

தொடரும்

– இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

photo_Ilakkuvanar_Thiruvalluvan