வலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015) 5 ஐ.) இலி /இன்மை(null) நல்(null) என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள். நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள். ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும் பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும். நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர்….
வலைமச் சொற்கள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) 4 ஏ.) protocol சீர் மரபு, செம்மை நடப்பு வழக்கு, செம்மை நடப்பொழுங்கு, செய்மை நடப்பொழுங்கு, நெறிமுறை, மரபு பேணுகை, மரபு முறை, மரபுச்சீர் முறைமை என வெவ்வேறு வகையாக இப்பொழுது குறித்து வருகின்றனர். மின் குழுமம் ஒன்றில் பேரா. செல்வகுமார், “நெறிமுறை எதிர் விதிமுறை/ எதிர் வரைமுறை – protocol, எது சரி? இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும்…
வலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…
வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வருமாறு : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது National Aeronautics and Space Administration என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம் / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…
வலைமச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
கணிப்பொறி தொடர்பாகவும் பிறஅறிவியல் தொடர்பாகவும் மிகுதியான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டி உள்ளன. அறிவியல் கலைச்சொற்கள் அவ்வப்பொழுது சொல்லாக்க ஆர்வலர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான், இவற்றால் பயன் விளையும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான். இனியேனும் படைப்பாளர்கள் தமிழ்க்கலைச் சொற்களையே பயன்படுத்தும் வேண்டுகோளுடன் கட்டுரையைத் தொடருகிறேன். கணிணிச் சொற்களில் வலைப்பணி(Network) சார்ந்த கலைச் சொற்களைக் காணலாம். கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக்,‘கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்ஒலிபெயர்ப்புச் சொற்களும்’ என்னும் (செருமனியி்ல்…