வளம் பெறும் மொழி மாறுதலடையும் – சி.இலக்குவனார்
வளம் பெறும் மொழி மாறுதலடையும்
இலக்கிய ஆசிரியரால் வளம் பெறும் மொழி, என்றும் ஒரே நிலையானதாக இராது. காலந்தோறும் மாறுதலடையும். இலக்கண வரம்புக்குட்பட்டு மாறுதலடைதல், மொழி வளர்ச்சியின் இன்றியமையாத நெறியாகும். இலக்கண ஆசிரியராம் தொல்காப்பியர் இம்மொழியல்பை நன்கு அறிந்த மொழிநூற் புலவராவார். அதனால் தாம் கூறும் இலக்கண வரம்புகட்கு விதி விலக்களிக்கும் புறனடை நூற்பாக்களை ஆங்காங்கே புகன்றுள்ளார்.
– செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்.9
Leave a Reply