ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள்: 1.மொழி, இன , நாட்டுப் பற்றில்லாதவரைத் தேர்ந்தெடுக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள் எக்காலத்திற்கும் எல்லாவர்க்கும் ஏற்ற வாழ்வியல் நூல் திருக்குறள். திருவள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மறையாகவும் அறிவுரை வழங்கி யுள்ளார். எப்படி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்மறையாகவும் அறிவுரை வழங்கி உள்ளார்.  எப்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது என்பது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறியுரையே ஆகும். இந்நெறியுரை ஆட்சியாளருக்கு, அமைப்பின் தலைவருக்கு, என வெவ்வேறு நிலையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்க்கு, வழிகாட்டியாக இவை உள்ளன. எனவே, அனைவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும்….

மொழியே நம் விழி – பேரா.முனைவர் சி.இலக்குவனார்

    உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம்.    இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே தமிழ் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.   மொழியே நம் விழி; மொழியின்றேல் நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது. பேரா.முனைவர் சி.இலக்குவனார்…

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே – சி.இலக்குவனார்

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே! மொழி மரம் போன்றது. இதன் சொற்கள் இலைகள் போன்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல பழைய இலைகள் வீழும். புதிய இலைகள் தளிர்க்கும். மரம் அவ்வாறே நிற்கும். இதே போன்று தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை நிலைத்திருக்கின்றது. இவை என்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இதில் தடுக்க இயலாது. பிற மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே என்பது குறிப்பிடுதற்குரியது. –  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

வளம் பெறும் மொழி மாறுதலடையும் – சி.இலக்குவனார்

வளம் பெறும் மொழி மாறுதலடையும் இலக்கிய ஆசிரியரால் வளம் பெறும் மொழி, என்றும் ஒரே நிலையானதாக இராது. காலந்தோறும் மாறுதலடையும். இலக்கண வரம்புக்குட்பட்டு மாறுதலடைதல், மொழி வளர்ச்சியின் இன்றியமையாத நெறியாகும். இலக்கண ஆசிரியராம் தொல்காப்பியர் இம்மொழியல்பை நன்கு அறிந்த மொழிநூற் புலவராவார். அதனால் தாம் கூறும் இலக்கண வரம்புகட்கு விதி விலக்களிக்கும் புறனடை நூற்பாக்களை ஆங்காங்கே புகன்றுள்ளார். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்.9

சமயச் சார்பற்ற மொழியும்- புனிதமான மொழியும்! : மறைமலை இலக்குவனார்

சமயச் சார்பற்ற மொழியும் புனிதமான மொழியும்!   புராணங்களின் அடிப்படையை மட்டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழிகளுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடையதாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. திராவிட மொழிகளின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கு அறிஞர்கள் காட்டும் தயக்கமும் சமற்கிருதத்துக்குக் கற்பித்துக் கூறப்படும் தொன்மையை மறுத்துரைக்கும் ஆய்வுகளை முன்மொழியாத அமைதியும் வருந்தத்தக்கன. இதன்விளைவாக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதற்குரிய முறையான…

மொழித்திற முட்டறுத்தல் – 4 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்

  (வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)     ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது…