(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

(குறள்நெறி)

91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்!

92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு!

93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே!

94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே!

95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே!

96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு!

97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு!

98. அனைவரிடமும் இன்சொல் கூறித் துன்பத்தைத் துரத்து!

99. பணிவையும் இன்சொல்லையும் அணிகளாகக் கொள்!

100. இனியன பேசி அல்லவை தேய்த்து, அறம் பெருக்கு!

(தொடரும்)

இலக்குவனார்திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110]