வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 -இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இன் தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20
(குறள்நெறி)
- உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி!
- உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர்!
- மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர்!
- மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி!.
- கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர்!
- மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி!
- கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்!
- வானம் வறண்டால் வானவர்க்கும் பூசை இல்லை என்பதை அறி!
- வானம் வழங்காவிடில் தானமும் தவமும் இல்லை என உணர்!
- நீரின்றி உலகமும் வான் மழையின்றேல் ஒழுக்கமும் இல்லை என உணர்!
(தொடரும்)
–இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply