(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  – 3

‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்:

“எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்;

கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு;

காடு பயம் எனக்கு; நாடு பயம் எனக்கு; கூடு பயம் எனக்கு;

குளம் பயம் எனக்கு; குளத்துக்குள் இருக்கும் நண்டு கண்டாலும் பயம் எனக்கு; பூச்செண்டு கண்டாலும் பயம் எனக்கு;

செண்டுக்குள் இருக்கும் வண்டு கண்டாலும் பயம் எனக்கு.

கடிக்கிற நாயும், பூனையும், பூனை தின்கிற எலியும் பயம் எனக்கு;

வெடித்துச் சிதறுகிற குண்டும் பயம் எனக்கு, குண்டுக்காகப் பதுங்கும் பதுங்குகுழியும் பயம் எனக்கு, பதுங்குகுழிக்குள் இருக்கிற பாம்பும் கடிக்குமோ என்ற பயம் எனக்கு.

மக்கள் கூட்டம் பயம் எனக்கு; தனிமை பயம் எனக்கு; தொங்கப் பயம், தாவப் பயம்;

இந்தக் காசு பயம்; மாசு பயம்; தூசு பயம்; அழுக்கு பயம்; குளிக்க பயம்; ஆடை பயம்; ஆடையில்லை என்றாலும் பயம்;

இந்த ஆங்கிலமும் பயம் எனக்கு;

செபிக்கப் பயம், சபிக்கப் பயம், எடுக்கப் பயம், கொடுக்கப் பயம், சகிக்கப் பயம், சுகிக்கப் பயம்.

எதையும் உயரத்தில் வைத்து அடுக்கப் பயம், யாரையும் கோவித்து அடிக்கப் பயம்.

அண்டை மனிதரை அணுகப் பயம், அணுகிய மனிதரை இழக்கப் பயம்.

உறவு பயம்; துறவு பயம்; இரவு பயம்; விடியலும் பயம்; புதியம் பார்க்க ஏனோ பயம்; மதியம் தூங்கி எழுந்தாலும் பயம்;

சோக பயம்; வேக பயம்; நோய்(உரோகப்) பயம்; நோக பயம், போக பயம், வருவதும் பயம் எனக்கு; வாழ பயம், சாகவும் பயம் ! இவ்வாறு பயங்கள்பற்றிக் கமல் அடுக்கிக் கொண்டே போவார். இடையில், பத்துப் ‘போபியோ’ பெயர்களைக் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் உள்ள எல்லா ‘போபியா’க்களும் தன்னிடம் இருப்பதாக மருத்துவர் பஞ்ச பூதம் சொன்னதாகக் கதை நாயகர் சொல்வார். இவற்றை அச்சநோய்பற்றி அறியாதவர்கள் அறிய உதவும் குறிப்புகளாகக் கொள்ளலாம்.

இத்தகைய பயங்களையும் மேலும் பலவற்றையும் குறிப்பிடும் வெருளி நோய் குறித்துத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.

வெருளிகளைத் தனித்தனியாகத்தான் குறிப்பிடுகின்றனர். எனினும் எளிதில் அறிவதற்காகப் பின்வரும் வகைப்பாடுகளை வரையறுத்துள்ளேன்.

 

அண்டம் சார் வெருளிகள்

அறம் சார் வெருளிகள்

ஆயுதம் சார் வெருளி 

இடவகை வெருளிகள்

இயற்கை சார் வெருளிகள்

இலக்கியம் சார் வெருளிகள்

உடலியக்க சார் வெருளிகள்

உடல்ஊட்டம் சார் வெருளிகள்

உணர்வு சார் வெருளிகள்

உயிரினம் சார் வெருளிகள்

உறவு சார் வெருளிகள் palvakai

உறுப்பு சார் வெருளிகள்

ஊர்தி சார் வெருளிகள்

எண் சார் வெருளிகள்

ஒலி, ஒளி சார் வெருளிகள்

ஒழுக்கம் சார் வெருளிகள்

கட்டடம் சார் வெருளிகள்

கருத்துசார் வெருளிகள்

கலை சார் வெருளிகள்

களவு சார் வெருளிகள்

கற்பிதம் சார் வெருளிகள்

கற்பிதம் சார் வெருளிகள்

கனவு சார் வெருளிகள்

காற்று வெருளிகள் 

கூர்மை தொடர்பான வெருளிகள்

சமயம் சார் வெருளிகள்

சுவை சார் வெருளிகள்

செயல்பாட்டு சார் வெருளிகள்

சொற்கள் சார் வெருளிகள்

தண்ணீர் சார் வெருளிகள்

தனிமைத் தொடர்பான வெருளிகள்

தன்மை வெருளிகள்

தீண்டல் சார் வெருளிகள்

தீர்வு சார் வெருளிகள்

தூய்மை வெருளிகள்

நாடு சார் வெருளிகள்

நிற்றல்சார் வெருளிகள்

நீர் சார் வெருளிகள்

நோய் சார் வெருளிகள்

பயிர் வெருளிகள்

பருவ வெருளிகள்

பாலியல் சார்ந்த வெருளிகள்

பொருள் வெருளிகள்

பேச்சு சார் வெருளிகள்

மக்கள் சார் வெருளிகள்

மருத்துவம் சார் வெருளிகள்

மாழை சார் வெருளிகள்

வண்ணம் சார் வெருளிகள்

வளம் சார் வெருளிகள்

வேலை சார் வெருளிகள்

இவற்றை இன்னும் சிலவற்றுடன் சேர்த்து இறுதியில் விளக்குவேன்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(காண்க – வெருளி அறிவியல் 4)