(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி)

 

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

28.அறிவுடைமை

271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது.

அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது.

  1. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது.

அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது.

  1. அறிவு பகைவரா லழிக்கப் படாதது.

அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது.

  1. அறிவினை யுடையா ரனைத்து முடையர்.

அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர்.

  1. அறிவில் லாதார் யாதுமில் லாதார்.

அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர்.

  1. அறிவிற் கறிகுறி யாவன செய்தல்.

அறிவுடைமை என்பது நன்மை பயக்கும் செயல்களைச் செய்தல் ஆகும்.

  1. எளியவாச் செலவுரைத் தரியவை யுணர்தல்.

அறிவு என்பது கேட்போர் உள்ளத்தில் பதியும்படி எளிமையாகச் சொல்லுவதும் மற்றவர்கள் கூறும் எளிதில் அறியமுடியாத பொருளைப் புரிந்து கொள்ளுதலும் ஆகும்.

  1. பாவம் பழிக்குப் பயந்திவ ணொழுகல்.

பாவம், பழி இவற்றிற்கு அஞ்சி நடத்தல் அறிவுடைமை ஆகும்.

  1. உலகினோ டென்று மொத்து நடத்தல்.

அறிவுடைமை என்பது உலகில் உயர்ந்தவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதுபோல அவர்களைப் பின்பற்றி வாழ்வது ஆகும்.

  1. எதிரதாக் காத்தெவ் வின்பமு மடைதல்.

பின் வரப்போவதை முன்பே அறிந்து தன்னைக் காத்து எல்லா விதமான இன்பமும் அநுபவித்தல் அறிவுடைமை ஆகும்.

 

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum