வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) தொடர்ச்சி]

 

 மெய்யறம்

இல்வாழ்வியல்

39. சிற்றினம் விலக்கல்


 1. சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்;

சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்;

 1. பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்;

தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்;

 1. அற்பத் தன்மை யளாவிய மாக்கள்;

சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்;

 1. பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்;

ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்;

 1. சுயநயங் கருதும் பயனிலா மாக்கள்.

தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர்.

 1. சிற்றினம் பொருளையுஞ் சீரையு மழிக்கும்;

சிற்றினம் ஒருவன் அடைந்த செல்வத்தையும் பெருமையையும் அழிக்கும்;

 1. அற்றமுங் குற்றமு முற்றிடச் செய்யும்;

மேலும் அச்சத்தையும் குற்றத்தையும் ஏற்படுத்தும்;

 1. முற்றவ நலத்தொடு கற்றவுஞ் சிதைக்கும்;

மேலும் ஒருவர் தனது மேன்மையான நடத்தையினால் அடைந்த பெருமைகளையும் அவர் கற்றதனால் அடைந்த அறிவினையும் அழிக்கும்;

 1. நரகும் பழியு நண்ணிடச் செய்யும்.

மேலும் மற்றவர் நம்மை இகழுமாறு செய்து நரகத்தில் விழவைக்கும்.

 1. சிற்றினப் பற்றினைச் சிறிதும் வேண்டேல். ஆதலால் சிற்றினத்தின் மீதான விருப்பத்தை அறவே நீக்குதல் வேண்டும்.

– வ.உ.சிதம்பரனார்

Related Posts

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் –  3/3

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் –  3/3

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.2 /2

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.  1/2

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.  1/2

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *