(வெருளி நோய்கள் 1481-1485 தொடர்ச்சி)

வேலையிலிருந்து முதலில் நீக்கப்படலாம் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது வேலை நீக்க வெருளி. சுருக்கமாக நீக்க வெருளி என்கிறோம்.
ஆட்குறைப்பு, பணியகம்/தொழிலகம் மூட இருத்தல் போன்ற காரணங்களால் வேலையாள் நீக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் வரும் பெருங்கவலையால் உருவாகும் (வேலை) நீக்க வெருளி. வேலை நீக்கம் தொடரும் முன்பே தன்னை முதலில் நீக்கி விடுவார்கள் என்றும் அஞ்சுவர்.
Prima என்னும் கிரேக்கச் சொல் முதலில் என்பதைக் குறிக்கிறது.
fora என்பது முதலில் இலத்தீனில் மக்கள் கூடும் அங்காடிகளைக் குறித்தது. பின்னர் பல்வகை அமைப்புகளையும் குறிக்கலாயிற்று. இந்த இடத்தில் பணி நிறுவன அமைப்பைக் குறிக்கிறது.
Prima fora நிறுவனத்தில் முதலில் (நீக்கப்படுதல் ) எனக் குறிக்கிறது.
00

நீச்சல் குளம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நீச்சல் குள வெருளி.
colimbus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நீச்சல் குளம்.
00

நீச்சல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நீச்சல் வெருளி.
Natato என்பது மாசிடோனியா(macedonia) மொழிச்சொல்.
00

குளிப்பது தொடர்பாகக் காரணமற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது நீராடல்வெருளி.
துணி துவைப்பது தொடர்பாகவும் பேரச்சம் கொள்வர்.
பொதுவாகச் சிறுவர்களும் பெண்களும் குளியல் வெருளியால் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.
குளிக்கும்பொழுது யாரேனும் மறைவாகப் பார்க்கலாம், மறைவாகப் படம் பிடிக்கலாம், குளியல் தொட்டியில் திடீரென்று தண்ணீர் நிறைந்து மூச்சு முட்டலாம், மின் கசிவால் அல்லது வெந்நீர்க்கலனால் மின் அதிர்ச்சிக்கு ஆளாகலாம் என்பன போன்ற எண்ணங்களுக்கு உள்ளாகிப் பேரச்சத்தை வளர்த்துக்கொள்கின்றனர்.
நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என அறிந்தவர்கள் யாருக்கேனும் குளிக்கும்பொழுது ஏற்பட்ட இன்னல் அல்லது இதுபோல் இடம்பெற்ற திரைப்படக்காட்சி அல்லது தொலைக்காட்சிப்படம் அல்லது இதுபோல் படித்த கதை அல்லது கட்டுரை ஆகியவை குறித்து மிகுதியும் சிந்தித்துத் தனக்கும் இப்படி நேரலாம் எனக் கற்பனையை வளர்த்துக்காெண்டு பேரச்சம் கொள்வர்.
Abluto என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நீரில் நனைத்தல், அலம்புதல். இங்கே நனைதல் என்பது நீராடலைக் குறிக்கிறது.
00